கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

sea

கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் தூத்துக்குடி மீனவர்கள்  கடலுக்கு செல்ல வேண்டாம்

கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் தூத்துக்குடி மீனவர்கள்  கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளதை தொடர்ந்து இன்று(14.11.2023) விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.  

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி,  தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் சுழல் காற்று மணிக்கு 40-45 கி.மீ வேகம் வரை வீசுவதுடன் இடையிடையே 55 கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று 14 ம் தேதி மற்றும் 15ம் ஆகிய தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என தூத்துக்குடி மீனவர் நலத்துறை உதவி இயக்குநர்  (மீன்பிடித் துறைமுக மேலாண்மை) விஜயராகவன் தெரிவித்துள்ளார். 

இதன் ஒருபகுதியாகவும், நேற்று ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியை சேர்ந்த டினோ(22) என்ற வாலிபர் கடலில் மீன் பிடித்தபோது தவறி விழுந்து பலியானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. இதனால் படகுகள் அனைத்தும் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்தது.