தூத்துக்குடியில் அதிகரிக்கும் மின் மோட்டார் திருட்டு சம்பவங்கள்

Theft

தூத்துக்குடியில் அதிகரிக்கும் மின் மோட்டார் திருட்டு சம்பவங்கள்

சமீபகாலமாக உப்பளங்கள், குடியிருப்புகளில் உள்ள மின் மோட்டார்களை  குறிவைத்து திருடும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். 

சமீபத்தில் பழையகாயல் பகுதியில் உள்ள உப்பளங்களில் சிசிடிவி கேமரா அடித்து நொறுக்கப்பட்டு மின் மோட்டார்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தற்போது தூத்துக்குடி கணேஷ்நகரை அடுத்த அமுதாநகர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் புதிதாக கட்டிவரும் வீட்டின் முன்பு வைத்திருந்த மின் மீட்டர் உள்ளிட்டவைகள் அடித்து நொறுக்கப்பட்டு மின் மோட்டார் திருடப்பட்டுள்ளது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இரவு நேரங்களில் குடிபோதையில் வாலிவர்கள் சுற்றிவரும் போக்கு அதிகரித்துள்ளது. மதுவை அரசே விற்பதால் போலீசாரால் அவர்களை பெரிய அளவில் ஒன்றும் செய்ய முடியவில்லை. குற்றம் செய்தவர்கள் சிசிடிவி வீடியோ போன்று எதாவது ஆதாரத்தோடு பிடிபட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. அதனால் போலீசாருக்கு பெரிய அளவில் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையே சாதகமாக பயன்படுத்தி சிலர் இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதே நிலை நீடித்தால் இளம் குற்றவாளிகள் அதிகரிக்கத்தான் செய்வார்கள் என்று கவலை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

ஆனாலும் போலீசார் தங்கள் கடமையை சரி வர செய்ய வேண்டும்தானே?