தூத்துக்குடி மாநகராட்சியில் பொங்கல் திருவிழா - பாரம்பரிய உடையில் விளையாடிய மேயரும், ஆணையரும்
Pongal News

தமிழகம் முழுவதும் மாவட்ட,நகர,ஒன்றியம் மற்றும் ஊராட்சி அளவிலான அரசு அலுவலகங்களில் தை பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் அரசு சார்ந்த அமைப்புகளில் தை பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. மேயர் ஜெகன் பெரியசாமியும், ஆணையர் மதுபாலனும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி கட்டி வந்திருந்தனர். அதுபோல் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், கவுன்சிலர்கள் பாரமரிய உடையில் வந்திருந்தனர். மாநகராட்சி அலுவலகம் முன்பாக மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் பானைகளில் அரிசியிட்டு பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் தயார் செய்து வைத்து கரும்பு, மஞ்சள், மற்றும் பல வகையான காய்கனிகள் படையலுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான பானை உடைத்தல், மியூசிக்கல் சேர், லக்கி நம்பர், பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், முறுக்கு கடித்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், வாயில் டியூஸ்பூன் மூலம் எலும்பிச்சை பழம் வைத்து ஒடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியே நடைபெற்றன. விளையாட்டு போட்டிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு விளையாடினர். சிலம்பாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி நிர்வாக வளர்ச்சிக்கு அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவோம், அனைவரும் தூய்மையை கடைபிடிப்போம் என்பதை வலியுத்தும் வகையில் பெண்கள் கோலாட்டம் ஆடினர்.
இதில் துணை மேயர் ஜெனிட்டா, துணை ஆணையர் சரவணக்குமார், உதவி ஆணையர்கள் சுரேஷ்குமார், கல்யாணசுந்தரம், பாலமுருகன், வெங்கட்ராமன், துணைபொறியாளர் சரவணன், நகரமைப்புத் திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அஹமது, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், ஸ்டாலின் பாக்கியநாதன், நெடுமாறன், இளநிலை பொறியாளர் சேகர், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, கனகராஜ், சுரேஷ்குமார், சரவணக்குமார், ஜெபஸ்டின் சுதா, ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், சரண்யா, சோமசுந்தரி, மரியகீதா, நாகேஸ்வரி, கண்ணன், பொன்னப்பன், முத்துவேல், பவானி மார்ஷல், மெட்டில்டா, காந்திமணி, ராஜேந்திரன், ஜாக்குலின்ஜெயா, தனலட்சுமி, தெய்வேந்திரன், சுயம்பு, ரெங்கசாமி, ஜான், அதிர்ஷ்டமணி, ராமகிருஷ்ணன், ஜெயசீலி, ரிக்டா, பேபி ஏஞ்சலின், சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, பாப்பாத்தி, மகேஸ்வரி, சந்திரபோஸ், எடின்டா, கற்பக கனி, முத்துமாரி, தனலெட்சுமி, ராமுஅம்மாள், மும்தாஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது, வட்டச்செயலாளர் ரவீந்திரன், வட்ட பிரதிநிதிகள் அருணகிரி, மார்ஷல், பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.