ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

Sterlite News

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் 20 வருடங்களுக்கு மேல் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையின் மூலம் ஆயிரணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. தூத்துக்குடி மாநகரில் வியாபாரம், துறைமுகம் சார்ந்த தொழில் என தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றியது ஸ்டெர்லைட் ஆலை. தேர்தல் கால எதிர்ப்பு போராட்டத்தினால் 2018ம் ஆண்டு முதல் இந்த ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரணக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். தூத்துக்குடியில்  தொழில் பின் தங்கியுள்ளது. துறைமுகம் கூட பழைய படி இப்போது இல்லை. இதுக்கிடையில் ஆலை நிர்வாகம், உச்சநீதிமன்றம் வரை ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கேட்டு முறையிட்டது. தற்போதுள்ள நிலையில் ஆலையை திறக்க அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து ஆலை நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. அதுபோல் வேலை வேண்டுவோரும், தொழில் வேண்டுவோரும் மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடியில் இன்று(20.12.2024)தமிழ்நாடு முறைசாரா தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச் சங்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     

ஆர்பாட்டத்தின் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது கடுமையான சமூக பொருளாதார மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. துறைமுகம், நூற்பாலைகள், அனல் மின் நிலையம், இந்திய உணவு கழகம்,உப்பளங்கள், சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் குறிப்பாக ஸ்டெர்லைட் தாமிர ஆலையும் அதில், நேரடியாக 1500 பேரும், அதை சார்ந்து 40000 தொழிலாளர்களும் மேற்கூறிய தொழில்களில் தினக்கூலிகளாக 10,00,000 பேரும் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளதுதான் அதற்கு காரணம்.

இதை கருத்தில் கொண்டுதான் பராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கடந்த 18.12.24 அன்று 30000 தொழிலாளர்கள் வேலை பாரக்கும் அளவுள்ள செமி கண்டக்கடர் உற்பத்தி அலகுகளை அமைக்க வேண்டுமென  வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில் மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் ஸ்டெர்லைட் ஆலையை உடனடி செயல்பட வைக்க முடியும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை   மூடப்படுவதற்கு சரியான காரணங்கள் இல்லையென்று மக்கள் நினைக்கிறார்கள். ஸ்டெர்லைட் தாமிர ஆலை செயல்பாட்டிற்கு வந்தால் சுமார் 3000 லாரிகளுக்கு வேலை கிடைக்கும். அதுபோல அந்த லாரிகளில்  மூலப்பொருள் மற்றும் பினிஷிங் புராடெக்டகள், அவற்றை கையாள ஏழை தொழிலாளர்கள் ஷிப்ட் ஒன்றுக்கு 4000 பேருக்குவேலை கிடைக்கும். இதே போல துறைமுக தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படும். ஆலை மூடப்பட்டதால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் லாரி உரிமையாளர்கள் பலர் லாரிகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் வேலையின்மையும் அதன் விளைவுகளும் மாறி வருகின்றன. பொருளாதார சூழ்நிலையில் 125 ஆண்டுள் பழமை வாய்ந்த நூற்பாலைகள் தொழில் நுட்பத்தால் மாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் 7000 கூலித்தொழிலாளர்கள் பணியாற்றிய இடத்தில் புதிய ரக இயந்திரங்கள் வருகையால் அந்த வேலையும் பறிபோனது.

உப்பளங்களை பொறுத்தவரையில் தூத்துக்குடி நகரம் விரிவடைந்ததால் உப்பளங்கள் தொழிற்சாலையாகவும், குடியிருப்புகளாகவும் மாறியுள்ளன. ஒரு தொழிற்சாலை மூலம் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டால் அந்த தொழிற்சாலையை மூடுவது நியாயமாக இருக்கும். சில விரோத மணப்பாண்மையாலும், தொழில் போட்டியாலும் ஸ்டெர்லைட் ஆலையை முடக்குவது என்பது எந்த விதித்தில் நியாயம்? கடந்த காலங்களில் ஸ்டெர்லைட் ஆலையால் வாழ்ந்தவர்கள் என்பது பல ஆயிரம் தொழிலாளர்கள்.

நாட்டினுடைய வளர்ச்சி என்பது மக்களுடைய வேலை வாய்ப்பு, பொருள் உற்பத்தி, அந்நிய செலாவணியை ஈட்டுவது தான். இதன் மூலம் தான் நாட்டின் GDP  உயரும். ஸ்டெர்லைட் ஆலை இயங்கினால் மத்திய, மாநில அரசுக்கு வரி வருவாய் மூலம் ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய கிடைக்கும்.  மேலும் 40% நாட்டின் தாமிர தேவையை பூர்த்தி செய்யும். எனவே இந்த தொழிலை அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஸ்டெர்லைட் தாமிர ஆலையை சார்ந்து சுமார் 400 சிறு, குறு சார்பு தொழில் அமைப்புகள் இயங்கி வந்தன. அவை அனைத்தும் முடங்கி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதில் வேலை செய்து வந்த தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சிக்கு நம்முடைய மாநில முதல்வர்  ஸ்டாலின் அவர்கள்  சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி சில தொழில்களை தூத்துக்குடிக்கு கொண்டு வர நினைக்கிறார். அவர்களுக்கு எங்களுடைய INTUC தொழிலாளர்கள் சார்பாக ராயல் சல்யூட்.

தவறுகளை களைந்தெடுத்து உடனடியாக திறக்க வாய்ப்புள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால், ஆலையை சுற்றியுள்ள  கிராமங்களில் வாழும் சுமார் 40,000 குடும்பங்கள் கிடைக்கும் வேலைகளின் மூலம் திருப்தியாக வாழ்வார்கள். மேலும் காரணமின்றி மூடப்பட்டுள்ள வேதாந்தா (ஸ்டெர்லைட்) அனல் மின் நிலையத்தினை உடனடியாக இயக்க அனுமதிக்க அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்’’ என்று பேசினர்.