கலங்காதீர்கள்! உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்!
Nalumavadi News
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் என்கிற தேவனுடைய கூடாரத்தில் 2025 ஜனவரி மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குத்தத செய்தியும். ஜெபமும் செய்கிறார் சகோ.மோகன் சி லாசரஸ்.
இது குறித்து அவர் அளித்துள்ள செய்தி :
உங்கள் உள்ளத்தில் எதோவொரு துக்கம் இருக்கிறது! உங்களால் அதை வெளியிலும் சொல்ல முடியவில்லை! உங்கள் துக்கத்தை புரிந்து கொள்ளவும் யாருமில்லை! என்ன செய்வதென்று தெரியாமல் கலங்குகிறீர்கள்!
ஒரு நிம்மதியும் இல்லை! சந்தோஷமாக இருக்கவும் முடியவில்லை! வெளியில் மற்றவர் களுக்கு முன்பாக சந்தோஷமாக இருப்பதைப்போல உங்களை காண்பித்துக் கொள்கிறீர்கள்! ஆனால், உங்கள் உள்ளமோ கலங்கிக் கொண்டிருக்கிறது! நிம்மதியாக தூங்க முடியவில்லை! 'வாழ்வதா? சாவதா?" என்கிற போராட்டம்! 'என்ன செய்வது?' என்று தெரியாமல் அங்கலாய்க்கிறீர்கள்!
உங்களை உண்டாக்கிய ஆண்டவர் உங்களோடு பேசுகிறார்: "என் மகனே... என் மகளே... கலங்காதே, உன் துக்கம் சந்தோஷமாக மாறும்!" என்று சொல் கிறார்.
உங்களை துக்கப்படுத்துகிற காரியம் என்ன? வியாதியின் வேதனையா? பிசாசின் போராட்டமா? வறுமையா? கடன் பிரச்சனையா? நிந்தையா? அவமானமா? நஷ்டங்களா? இழப்புகளா? குடும்பத்தில் சமாதானம் இல்லையா? உங்களோடுதான் ஆண்டவர் பேசுகிறார்: "...உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்." (யோவான் 16:20) என்று உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறார்.
"யார் இந்த ஆண்டவர்?" என்று எண்ணு கிறீர்களா? அவர்தான் இந்த வானத்தையும், பூமியையும் உண்டாக்கியவர்! அவர்தான் உங்க ளையும், என்னையும் சிருஷ்டித்தவர் மனிதனுடைய துக்கத்தை சந்தோஷமாக மாற்ற, அவர் ஒரு மனிதனாக அவதரித்தார் இந்த அண்ட சராசரங்களையும்
ஆளுகை செய்கிற கடவுள், ஒரு மனிதனாக இந்த பூமிக்கு வந்தார்!
மனிதனுடைய துக்கத்திற்கு காரணமாக இருக்கிற பாவத்திற்கும், சாபத்திற்கும் பரிகாரம் செய்ய, தன்னையே பரிகார பலியாக அர்ப் பணித்து, சிலுவையில் தன் பரிசுத்தமுள்ள இரத் தத்தை சிந்திக் கொடுத்தார்! மூன்றாம் நாளில் மரணத்தை ஜெயித்து, உயிரோடு எழுந்தார்! அவர் சதாகாலமும் உயிரோடிருக்கிறவர்!
அவர்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அவர் யாரையும் மதம் மாற்ற வர வில்லை! "மதம் மாறுங்கள்!" என்று சொல்லவு மில்லை! மனிதனுடைய துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவதற்காகவே, நம்மைப்போல ஒரு மனிதனாக அவதரித்து,
மனிதனுடைய பாவ, சாப தோஷங்களை மாற்ற, சிலுவையிலே பரிகாரத்தை உண்டாக்கினார். உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்ற, அவரால்தான் முடியும்! நம்முடைய பாவங்களை மன்னிக்க, இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தார்! (1 பேதுரு 2:24). நம்முடைய சாபங்களை போக்க, இயேசு கிறிஸ்து நம்முடைய சாபங்களை சிலுவையில் ஏற்றுக் கொண்டு பரிகாரத்தை உண்டாக்கினார்! (கலாத்தியர் 3:13).
நம்முடைய நோய்களை நீக்கி, சுகம் கொடுக்க, இயேசு கிறிஸ்து நம்முடைய நோய்களை சிலுவை யிலே சுமந்து தீர்த்தார். (மத்தேயு 8:17).
நம்முடைய துக்கங்களை சந்தோஷமாக மாற்ற, இயேசு கிறிஸ்து நம்முடைய துக்கங்களை சிலுவையில் சுமந்து தீர்த்தார்! (ஏசாயா 53:4).
"...இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." (1 யோவான் 1:7).
இதை விசுவாசித்து, அவரிடத்தில் வேண்டுதல் செய்தவுடனே, உங்க ளுக்குள் ஏற்படுகிற ஒரு மாற்றத்தை உங்களால் உணர முடியும்.
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்! உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்ற, அவர் உங்களுக்கு அற்புதம் செய்வார். விசுவாசத்தோடு இந்த பிரார்த்தனையை சொல்லுங்கள்!
இயேசுவே, நீர் சர்வ லோகத்தின் ஆண்டவர் என்று நான் விசுவாசிக்கிறேன்! என் துக்கத்தை சந்தோஷமாக மாற்ற, நீர் மனிதனாக அவதரித்தீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன்!
என் பாவ, சாப தோஷங்களை நீக்க, நீர் எனக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன்! எனக்கு அற்புதம் செய்ய, நீர் மரணத்தை ஜெயித்து, உயிரோடு எழுந்தீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன்!.
இயேசுவே, என் பாவங்களை எல்லாம் மன்னித்து, எனக்கு சமாதானம் தாரும்! இயேசுவே, என் மீதிருக்கிற சாபங்களை
எல்லாம் நீக்கி, என்னை ஆசீர்வதியும்!
இயேசுவே, என் நோய்களை குணமாக்கி, எனக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தாரும்! இயேசுவே, என் பயங்களை நீக்கி,
எனக்கு மகிழ்ச்சியை தாரும்! இயேசுவே, என் துக்கத்தை மாற்றி, எனக்கு சந்தோஷத்தை தாரும்! இயேசுவே, என் உள்ளத்தில் வந்து,
என்னோடு கூட தங்கியிரும்!
நீர் எனக்குதகப்பனாக... தாயாக... இரட்சகராக... ஆண்டவராக இருந்து, என்னைவழிநடத்தும்|ஆமென்!ஆமென்!