தூத்துக்குடியில் கலைஞரின் முத்தமிழ்த்தேர் - அமைச்சர்கள் வரவேற்பு

muthamizh ther

தூத்துக்குடியில் கலைஞரின் முத்தமிழ்த்தேர் - அமைச்சர்கள் வரவேற்பு

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது சாதனைகளை நினைவு கூரும் வகையில் தமிழகம் முழுவதும் முத்தமிழ்த்தேர் வலம் வருகிறது. கலைஞர் பன்முக ஆற்றலையும் அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி நேற்று முன் தினம் கன்னியாகுமரியில் வலன் வர தொடங்கியது. 

நேற்று அது திருநெல்வேலிக்கு வந்தது. இன்று தூத்துக்குடிக்கு வந்தது. அதனை வி.வி.டி சிக்னல் அருகில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து அண்ணா பேருந்து நிலையம் மற்றும் பூபாலராயர்புரம் மார்க்கெட் ஆகிய இடங்களுக்கு முத்தமிழ் தேர் செல்கிறது. இரவில் கோவில்பட்டி வழியாக விருதுநகர் மாவட்டத்திற்கு செல்கிறது. நாளை காலை 9.00 மணிக்கு விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய வீதிகளில் இத்தேர் வலம் வர உள்ளது. 04.11.2023 முதல் 05.12.2023 வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.  

தூத்துக்குடி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார்,  தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, முக்கிய பிரமுகர்கள் ராமஜெயம், உமரிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.