தூத்துக்குடியில் திடீர் மழை - வெப்பம் தனிந்தது

Rain news

தூத்துக்குடியில் திடீர் மழை - வெப்பம் தனிந்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில மணி நேரம் வரை கடும் வெப்ப நிலை காணப்பட்டு வந்தது. தற்போது திடீரென மேகம் சூழ்ந்து, மழை பெய்து வருகிறது. பள்ளி சென்று வீடு திரும்பும் மாணவ, மாணவியர் மழையில் சிக்கி கொள்ளும் நிலை ஏற்பட்டது. மாணவர்கள் சிலர் திடீர் மழையில் நனைந்து கொண்டு, அதனை அனுபவித்து செல்கின்றனர்.