நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் 51 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி. பயின்ற மாணவர்கள் கூடுகை!

nazareth

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் 51 ஆண்டுகளுக்கு முன்பு  எஸ்.எஸ்.எல்.சி. பயின்ற மாணவர்கள் கூடுகை!

நாசரேத்,டிச.10:நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 51 ஆண்டுகளு க்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி. பயின்ற மாணவர்கள் ஓன் றாக கூடி தங்களது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் 1971-72 இல் எஸ்.எஸ்.எல்.சி. பயின்ற மாணவர்கள் ஓன் றாக கூடினர். விழா ஆரம்ப ஜபத்தை குருவானவர் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஏறெடுத்தார். இக்கூடுகை யில் 70 பழைய மாணவர் கள் பங்கேற்றனர். அரிமா புஷ்பராஜ் வரவேற்றுப் பேசினார். இம்மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றக் கொடுத்த ஆசிரியர்கள் வேதராஜ், அசரியா, ராஜ்குமார் அருளானந்தம், அதிசயராஜ் ஆகியோரை  விழாவிற்கு வரவழைத்து அவர்களை  கௌரவித்த னர். கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை அரிமா புஷ்பராஜ், அல்பர்ட், மர்கா ஷிஸ் டேவிட் வெஸ்லி, கிங்ஸ்லி, சுரேஷ்குமார், ஜெபக்குமார், அல்பர்ட் ஜெபமணி, ஜெயராகவன், கிருபாகரன், தனுஷ்கரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். மதிய விருந்து நடைபெற்றது. அதன்பின்பழைய மாணவர் களின் மகாசபைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் தலைவராக தனுஷ்கரன் செயலாளராக அரிமா புஷ்பராஜ் இணைச் செய லாளராக ஜெயராகவன், அல்பர்ட் ஜெபமணி, ஒருங்கிணைப்பாளராக மீனாட்சிசுந்தரம், பொருளா ளராக ஜெபக்குமார் சால மோன் ஆகியோர் ஒருமன தாக தேர்வு பெற்றனர். கூட் டத்தில் கலந்து கொண்ட அனைத்து பழைய மாண வர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.