கூட்டாம்புளி சாலை உடைத்து போட்டு 6 மாதமாச்சு, இன்னும் சீரமைக்கும்பணி முடியவில்லை - பொதுமக்கள் கொதிப்பு

Road News

கூட்டாம்புளி சாலை உடைத்து போட்டு 6 மாதமாச்சு, இன்னும் சீரமைக்கும்பணி முடியவில்லை - பொதுமக்கள் கொதிப்பு

கூட்டாம்புளியில் சாலையை உடைத்துபோட்டு 6 மாதமாகியும் இதுவரை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதிடைந்துள்ளனர். விரைந்து சீரமைத்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறன்றனர்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், குமாரகிரி ஊராட்சி, கூட்டாம்புளியில் கடந்த 6 மாத்திற்கு முன்பு சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. அதற்காக கூட்டாம்புளி – சிறுப்பாடு சவேரியார்புரம் சாலை, கூட்டாம்புளி மெயின் ரோடு – சாமிக்கோவில் சாலை, நூலகம், அம்மன்கோவில்தெரு, சாமிக்கோவில் தெரு, சிலுவைபுரம் இடையிலான சாலைகள் உடைக்கப்பட்டது. உடைத்துபோடப்பட்ட சாலையில் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்காமல் இருந்த நிலையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தொடர்ந்து புகார் கூறப்பட்டதின் அடிப்படையில் சண்முகையா எம்.எல்.ஏ தலையிட்டதை தொடர்ந்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. ஆனால் நூலகம், அம்மன் கோவில் தெரு, சாமிக்கோவில் தெரு, சிலுவைபுரம் இடையிலான சாலை மட்டும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. உடைத்துபோட்ட சாலையில் ஜல்லி விரித்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை சீரமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இது குறித்து அனைத்து கட்சி  பிரமுகர்களும், பொதுமக்களும் சண்முகையா எம்.எல்.ஏ, வட்டாரவளர்ச்சி அலுவலர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனாலும் சீரமைக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. கூட்டாம்புளி கிராம மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். சாலை சீரமைக்கும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இது குறித்து ஒப்பந்தகாரரிடம் பேசினோம், எங்க வேலை குவாலிட்டியா இருக்கும். ஒவ்வொரு வேலையையும் பொதுமக்கள் திருப்தி அடையும் வகையில் முடித்து வர்றோம். இந்த ரோட்டை பொறுத்தவரை உடைத்து போட்டிருக்கிறோம். இதை அதிகாரிகள் பார்வையிட்டு ஓகே சொன்னவுடன் வேலையை தொடங்கி, முடிப்போம். இந்த வேலையின் ஒரு பகுதியை ஏற்கனவே முடித்திருக்கிறோம். அதுக்கு இப்போது வரை 3 மாதமாச்சு இன்னும் பில் பாஸாகவில்லை. இதுபோன்ற பிரச்னை இருப்பதால் வேலையில் டிலே ஆகிறது என்றார்.