திமுகவிற்கு போட்டியாக பாஜக போட்டி போராட்டம் - தேசிய அளவில் கவனத்தை ஈர்க்க துடிக்கும் தமிழக கட்சிகள்

Dmk - Bjp

திமுகவிற்கு போட்டியாக பாஜக போட்டி போராட்டம் - தேசிய அளவில் கவனத்தை ஈர்க்க துடிக்கும் தமிழக கட்சிகள்

பாஜகவிற்கு நேர் எதிரான கொள்கை கொண்ட கட்சி திமுக. அதனால் பாஜகவை இந்திய அளவிலும் சரி, தமிழகத்திற்குள்ளும் சரி ஆட்சி பொறுப்பிற்கு வந்துவிட கூடாதபடி தடுக்கும் கொள்கையோடு செயல்படுகிறது திமுக. தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை, இந்தியாவையே பாஜக ஆளும் அளவிற்கு கொண்டு சென்றது என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். அதிலும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி எல்லை தாண்டி பல நாடுகளின் நன்மதிப்பை பெற்றிருக்கும் நிலையில் அடுத்தடுத்து பாஜகவே ஆட்சி பொறுப்பிற்கு வரும் நிலை இருந்து வருகிறது. அதிலும் பாஜகவை தமிழ்நாட்டிற்குள் விடமாட்டோம் என்று தொடர்ந்து கோஷம் எழுப்பி வரும் திமுகவின் முயற்சியை பின்னுக்கு தள்ளி தமிழகத்துக்குள்ளும் அதிகாரம் செய்ய வரும் 2016ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை பாஜக பயன்படுத்தும் என்கிற தகவல் திமுக போன்ற அரசியல் கட்சிகளுக்கு பெரிய சோதனையாக உள்ளது.  பாஜகவுக்கு எதிராக இந்திய அளவில் கூட்டம் சேர்க்க முயற்சி செய்து வரும் திமுக, மறு சீரமைப்பு காரணத்தை சொல்லி அனைத்து கட்சிகளின் கூட்டு குழு கூட்டம் என்கிற ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளை கூறி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி நாளை காலை 10 மணியளவில் பாஜகவினர் தங்கள் வீட்டின் முன்பு நின்று கருப்பு கொடி காட்டுவார்கள் என்று தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட டாஸ்மாக் மதுபான ஊழல் சம்பந்தமாக போராட்டத்தின் போது பாஜகவினரை முன் கூட்டியே போலீஸார் கைது செய்துவிட்டதால் அவர்களை ஒருங்கிணைத்து தமிழக பொதுமக்கள் மத்தியில் காட்டும் முயற்சி நிறைவேறாமல் போனது. அதனை தமிழக போலீசார் தடுத்தனர்.  இப்போது இந்த போராட்டம் அவரவர் வீட்டின் முன்பு நின்று கருப்பு கொடி காட்டுவதாக இருக்கிறது. 

ஆக, பாஜகவிற்கு கூடும் கூட்டத்தை பொதுமக்கள் பார்த்துவிட வேண்டும் என்று பாஜக ஆசைப்படுவதும், அதை பார்த்து மேலும் மேலும் பாஜகவிற்கு மாஸ் ஏறிவிட கூடாது என்று தமிழக அரசு கருதுவதாகவே தெரிகிறது. அதுபோல் திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டு குழு கூட்டம் என்கிற பெயரில் பாஜகவுக்கு எதிரான தோற்றத்தை உருவாக்க திமுக நினைப்பதுபோல், திமுகவின் நோக்கம் மற்றும் தமிழக அரசில் உள்ள குறைபாடுகளை பொதுமக்களிடம் காட்டுவதற்கு பாஜக நினைக்கிறது. அந்த வகையில்தான் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு குழு கூட்டமும், தமிழக அரசுக்கு எதிரான கருப்பு கொடி காட்டும் போராட்டமும் நடைபெறுகிறது என்கிறார்கள்.