தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாட்டை திராவிடம் என்ற பெயரில் திமுக அழிக்க முயற்சிக்கிறது - மோடி அட்டாக்

election news

தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாட்டை திராவிடம் என்ற பெயரில் திமுக அழிக்க முயற்சிக்கிறது - மோடி அட்டாக்

தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாட்டை திராவிடம் என்ற பெயரில் அழிக்க முயற்சிப்பதாக அகஸ்தியர்பட்டியில்நடந்த பாஜக தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,குமரி,விருதுநகர் பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபிரம் அருகேயுள்ள அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளி வளாகத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. 

கூட்டத்தில் பிரதமர் மோடி, ’’புண்ணிய பூமியான திருநெல்வேலி நெல்லையப்பர்காந்திமதியம்பாளை வணங்குகிறேன். மாற்றத்தின் பூமியான இங்கு பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பார்க்கும்போது திமுக காங்கிரஸ் இடம் பெற்றுள்ள இண்டியா கூட்டணிக்கு தூக்கம் தொலைந்திருக்கும். 

தமிழக மக்கள் தமிழ் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடிய அதேநாளில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடபப்பட்டது. எங்களது தேர்தல் அறிக்கையில்  பல்வேறு சிறந்த திட்டங்களை அறிவித்துள்ளோம். இதனை மோடியின் கியாரண்டி என அழைக்கின்றனர். தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி வீடுகள் வழங்கும் திட்டம் மீனவர்கள்ய்க்கு கடல்பாசி, முத்து உற்பத்திக்கான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. வளர்ந்த தமிழகம் தான் வளர்ந்த பாரதமாக மாறும் என்று நம்பிக்கையில் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம். 

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக நாட்டிற்காக கடுமையாக உழைத்துள்ளது. சிறந்த திட்டங்களை வழங்கியுள்ளோம். நெல்லை - சென்னை இடையே  இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலம் இப்பகுதி வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நாட்டின் தெற்கிலும் பில்லட் ரயில் திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் புதிய அரசு வந்ததும் அதற்கான பணிகள் துவங்கும். தமிழகத்தின் சகோதரிகள், தாய்மார்கள் மோடியை ஆதரிக்கின்றனர்.தாய்மார்கள், சகோதரிகளின் தேவை அறிந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். 

ஒரு கோடியே 25 லட்சம் குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளோம் 12 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் பேருக்கு காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 57 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. சுமார் ரூ.3 லட்சம் கோடி முத்ரா வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 

பாரத மாதா வேடமணிந்து ஒரு குழந்தை இங்கு வந்துள்ளது. அந்த குழந்தையை பாராட்டுகிறேன். தமிழ் கலாசாரத்தை போற்றும் பாஜகவை அனைவரும் விரும்புகிறார்கள். தமிழ்மொழிக்கு உலக அங்கிகாரம் பெற்றுத்தர பாஜக உறுதியேற்றுள்ளது. உலக சுற்றுலா வரை படத்தில் தமிழகம் இடம் பெற நடவடிக்கைபெடுக்கப்படும். திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்ற கலாசார மையம் உருவாக்கப்படும். இண்டியா கூட்டணியின் திமுகவும், காங்கிரசும் வெறுப்பு மற்றும் எதிர்ப்பு சித்தாந்தத்தில் உருவாக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம்,பண்பாட்டை திராவிடம் என்ற பெயரில் அழிக்க நினைக்கிறார்கள். செங்கோல், பாரம்பரியவிளையாட்டான ஜல்லிக்கட்டு போன்றவற்றை திமுக எதிர்த்தனர். 

வீரமும்,தேச பற்றும் தென் தமிழகத்தில் இருக்கும் இந்த பகுதியை நினைத்து பார்க்கும் போது இப்பகுதியில் இப்பகுதியில் பொங்கும் வீரமும், தேசபற்றும் நினைவுக்கு வருகிறது. மருது சகோதரர்கள், வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்பட பலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆங்கிலேயர்களை எதிர்த்து துணிச்சலாக போராடினர். இவர்களுக்கு தனிப்பட்ட ஆசைகள் இல்லை. இந்தியா ஒரு வலுவான வளமான நாடாகவே விரும்பினர். 

எதிரி நாடுகளுக்கு அவர்களுடைய பாஷையிலேயே பதிலடி கொடுக்கும் வகையில் வளர்ந்துள்ளோம். ஜி.20 மாநாட்டினை சிறப்பாக நடத்தியுள்ளோம்.நாட்டின் மீது பற்று வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான கட்சி பாஜகதான். பாஜய எப்போதும் தமிழ் மக்கள் மீது மாறாத அன்பை செலுத்தும் கட்சியாகும். இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும் என்று போராடிய வ.உ.சியை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறார். போதைப் பொருள் என்ற விஷம் தமிழகம் முழுவதும் பரவி விட்டது. பல நூறு கோடி ரூபாய்க்கு திறந்த வெளியில் போதை வர்த்தகம் நடக்கிறது. 

இந்த போதைப் பொருள் மாபியா யாருடைய பாதுகாப்பில் உள்ளார் என்பது குழந்தைகளுக்கு கூட தெரியும். பெற்றோர் தங்களது குழந்தைகளைக் காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் நரேந்திர மோடி வேடிக்கை பார்க்க மாட்டான். போதை வணிகத்திற்கு எதிராக போராடுவேன். இந்த நாட்டிலிருந்து போதையை ஒழிப்பேன் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன். இளம் தலைமுறையினரை போதையில்லாத ஓர் உலகத்திற்கு கண்டிப்பாக பாஜக அழைத்துச் செல்லும், குழந்தைகளை காப்பாற்றவும், வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகம் உருவாக அனைவரும் பாஜகவை ஆதரிக்க வேண்டும். 

தமிழகத்திற்கான கடைசி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். ஏனெனில் வரும் 19ம் தேதி உங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இந்நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஒரு செய்தி சொல்ல விரும்புகிறேன். தொடர்ந்து தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். உங்களைப் பார்த்ததில் எனக்கு மன உறுதி ஏற்பட்டுள்ளது. பாஜகவிற்கும், எனக்கும்,தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் மக்கள் மிகப்பெரிய ஆதரவை அளித்து வருகின்றனர். இந்த வரவேற்பை பார்க்கும்போது ஒரு புதிய வரலாற்றினை, ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க ஆயத்தமாகி வரிவது தெரிகிறது. தமிழகத்தில் பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் எங்கும் இருக்கிறது என்று கேட்கும் இண்டியா கூட்டணியினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் மிப்பெரிய ஆதரவை பாஜவிற்கு அளிக்க வேண்டும். 

அவர்களிடம் ஒன்றுமேயில்லை. பழைய டேப்ரிக்கார்டரே உள்ளது. அதில் பாஜக வந்துவிடும், இந்தி வந்துவிடும் என்று என்ற பழைய பல்லவியை, எதிர்ப்பு பாட்டை மட்டுமே திரும்ப திரும்ப போடுகிறார்கள். அவர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மக்களின் தேவையையும் நிறைவேற்ற தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களால் எப்படி நிர்வாகம் செய்ய முடியும்?. 

எனவே இங்குள்ள வாக்காளர்களும், புதிய வாக்காளர்களாக உதயமாகியுள்ள இளைஞர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். எத்தனையோ கட்சிக்கு வாக்களித்திருப்பீர்கள். ஒரே ஒரு முறை பாஜகவிற்கு வாக்களியுங்கள். உங்களது கனவுகள் தான் எனது லட்சியம். ஒவ்வொரு நிமுடமும், ஒவ்வொரு நொடொயும் நான் உங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கப்போகிறேன். உங்களது வளர்ச்சி தான் என்னுடைய இலக்கு மற்றும் லட்சியமாகும். ஒரு நாளின் 24 மணி நேரமும் எனது இலக்கு 2047’’என்று பேசினார். மோடியின் பேச்சை நெல்லை தொகுதி பாஜக பொறுப்பாளர் நீலமுரளியாதவ் தமிழில் மொழிபெயர்த்தார்.