தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.5கோடி நிவாரண உதவிகள்

sterlite

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.5கோடி நிவாரண உதவிகள்

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் ரூ.5கோடி நிவாரண உதவிகளை வழங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது. பல பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனர். உடனடியாக  ஒரு லட்சம் மக்களுக்கு உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருடகள் படகு மூலமாகவும்,  மக்களின் வீடுகளுக்கே சென்று    வழங்கியது, தொடந்து  ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மக்களின் ஒருமாத தேவைக்கான அரிசி மற்றும்  மளிகை பொருட்கள் உள்ளிட்ட தரமான நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.

சேலை, வேட்டி, துண்டு, போர்வை, அரிசி, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு,  வத்தல் பொடி, சீரகம், கடுகு, மிளகு,மஞ்சள் பொடி, வெந்தயம், ஹமாம் சோப்பு, சீனி, பேஸ்ட், பிரஸ், பிஸ்கட் உள்ளிட்ட மசாலா பொருட்கள் மற்றும் சில்வர் தட்டு, டம்ளர் உள்ளிட்ட தரமான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாநகரில் திரு.வி.க நகர், இந்திரா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நிவாரண உதவிகளை ஸ்டெர்லைட் ஆலை முதன்மை இயக்க அலுவலர் ஏ. சுமதி இன்று வழங்கினார்.  பொருட்களை பெற்று கொண்ட மக்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாநகரில் பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான மடத்தூர், அய்யனடைப்பு,கோரம்பள்ளம்,பெரியநாயகபுரம், வடக்கு சிலுக்கன்பட்டி,தெற்கு சிலுக்கன்பட்டி, வீரநாயக்கன் தட்டு,முடுக்குகாடு,காலங்கரை,பாலதண்டாயுதபாணி நகர் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு ரூ.5கோடி மதிப்பில் நிவாரண உதவிகளை வழங்கி உள்ளது.

நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் தலைமை தகவல் தொடர்பு தலைவர் மீரா ஹரிதாஸ்,சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் சுந்தர்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.