நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி என்சிசி அலுவலருக்கு பாராட்டு விழா

nazareth

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி என்சிசி அலுவலருக்கு பாராட்டு விழா

நாசரேத்,ஏப்.26:நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை 100 மாணவர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் அலுவலராக  ஆசிரியர் சுஜித் செல்வசுந்தர் செயல்பட்டு வருகிறார்.  

இவர் நாக்பூரில் உள்ள என்சிசி அலுவலர்களுக்கான பயிற்சி பள்ளியில் இரண்டு மாதங்கள் பயிற்சி பெற்று திரும்பி வந்துள்ளார். அவருக்கு பாராட்டு விழா மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி சிற்றாலயத்தில் நடைபெற் றது. தாளாளர் சுதாகர் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் முன்னிலை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வாழ்த்துரை வழங்கினார். பயிற்சியை நிறைவு செய்த என்சிசி அலுவலர் சுஜித் செல்வ சுந்தருக்கு அசோசியேட் என்சிசி அலுவலர் என்ற புதிய பொறுப்புடன் கூடிய பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

பதவி உயர்வு பெற்ற என்சிசி அலுவலருக்கு தாளாளர் சுதாகர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் நினைப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், ஒவிய ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.