நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு சிறப்பு பயிற்சி
nazareth
நாசரேத்,ஏப்.26:நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் மாணவிகளுக்கு வேலை வாய்ப்புக்கான சிறப்பு பயிற்சி நடந்தது. நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் மாணவிகளுக்கு திறன் மேம்பாடு, வாழ்க்கையை நிர்ணயிக்கும் திறமைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கான சிறப்பு பயிற்சி 5 நாட்கள் நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் எட்வின் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி இயக்குனர் பேரா.ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். சென்னை ஜிடிடி பவுண்டேஷன் அமைப்பினர் பயிற்சி யை நடத்தினர்.பயிற்சியாளர் ராஜ் பிரபு மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். ஜிடிடி பவுண்டேஷன் அமைப்பு துணை பொது மேலாளர் காஞ்சனா பயிற்சியை பார்வையிட்டார். இந்த பயிற்சி மாணவிகளுக்கு பயனுள்ளதாக காணப்பட்டது.இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் , மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் செல்வின், இயக்குனர் ஜெயச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.