தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் தியானத்திற்கு வந்த பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த போதகர்
Pennai Emaatriya Pothakar
மன அழுத்தத்திற்கு தீர்வு தேடி சென்ற என்னை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துவிட்டு, பல லட்சம் பணத்தை அபகரித்த போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
தூத்துக்குடியை பூர்விகமாக கொண்ட ஸ்டீபன் என்பவரது மகளான கேத்தரின் (32). இவர், திருமணமாகி சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கு 8-வயது பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்தநிலையில் கேத்தரினுக்கும் அவரது கணவரும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மிகவும் மன அழுத்ததில் இருந்த கேத்தரின் தனது சொந்த ஊரான தூத்துக்குடி வந்திருக்கிறார். அதனைதொடர்ந்து மன நிம்மதிக்காக தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை மங்களகிரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ டிவைன் மெர்ச்சி தியான இல்லத்திற்கு வந்து தியானம் செய்தபோது அங்கு போதகராக உள்ள மைக்கேல் (எ) மகிலன் (62) என்பவர் மூலம் ஜோஸ்வா (எ) இசக்கி அறிமுகமாகி உள்ளார்.
ஜோஸ்வா (எ) இசக்கி, டிவைன் மெர்சி ஆலயத்திற்கு வருபவர்களுக்கு ஜெபம் செய்து வந்துள்ளார். அச்சமயத்தில் மன அழுத்ததில் இருந்த கேத்தரீனுக்கும் ஜோஸ்வா ஜெபம் செய்துள்ளார். மேலும், அவருக்கு ஆறுதல் கூறுவதுபோல் பழகியுள்ளார். மேலும், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி கேத்தரினிடம் பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜோஸ்வா, தான் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் எனக்கு பணம் வேண்டும் என்று கேத்தரினிடம் கேட்டிருக்கிறார். இதனால் கேத்தரின் சுமார் ரூ.5 லட்சம் பணத்தை ஜோஸ்வாவிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு போதகர் ஜோஸ்வா (எ) இசக்கியிடம், கேத்தரின் கேட்ட போது, ஜோஸ்வா மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த கேத்தரீன் வழக்கறிஞர்கள் மூலம் புதுக்கோட்டையில் உள்ள டிவைன் மெர்சி தியான மண்டபத்திற்கு நேற்று(11.10.2023)சென்று போதகர் ஜோஸ்வா (எ) இசக்கியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் கேட்டிருக்கிறார். அப்பவும் ஜோஸ்வா மறுப்பு தெரிவிக்கவே, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து கேத்தரின், தன்னை ஏமாற்றிய ஜோஸ்வா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனது பணத்தை மீட்டு தரக்கோரியும் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து கேத்தரின் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் பாதிக்கப்பட்ட பெண் கேத்தரின் மற்றும் போதகர் ஜோஸ்வா (எ) இசக்கி ஆகியோரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.