திருமறையூர் மறுரூப ஆலயத்தில் முப்பெரும் விழா!
nazareth
நாசரேத்,டிச.25: திருமறை யூர் மறுரூப ஆலயத்தில் முப்பெரும் விழா நடை பெற்றது.
திருமறையூர் சேகரம், திரு மறையூர் மறுரூப ஆலயத் தில் சபையாரின் கிறிஸ்து மஸ் கலை நிகழ்ச்சி, கிறிஸ் துமஸ் மரவிழா மற்றும் கிறி ஸ்துமஸ்விருந்து ஆகியமுப் பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு சேகரத்தலை வர் ஜான்சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஓய்வு நாள்பாடசாலைகுழந்தைகள்,வாலிப ஆண்கள் ஐக்கிய சங்கம், வாலிப பெண்கள் ஐக்கிய சங்கம், பெண்கள் ஐக்கிய சங்கம் ஆகியோர் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கினர். ஆலய பாடகர் குழுவினரின் சிறப்பு இசை நிகழ்ச்சி மற்றும் பிரைட்டன் குழுவினரின் சிறப்பு பாடல் இடம்பெற்றது.இந்திய மிஷ னரி குருவானவர் பொன்னு சாமி ஜெபிக்க முப்பெரும் விழா நிறைவு பெற்றது.நிக ழ்விற்கு திருமறையூர் மற் றும் நாசரேத் வட்டாரத்தில் இருந்து திரளானோர் பங்கு பெற்றனர்.
விழா முடிவில் அனைவருக்கும் கிறிஸ்து மஸ்விருந்துவழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் திருமண் டல பெருமன்ற உறுப்பினர் கள் ஜெயபால், தேவதாஸ், சேகர செயலர் ஜான்சேகர், கமிட்டி உறுப்பினர்கள், ஸ்டான்லி ஜான்சன் துரை ஆலயப்பணியாளர் ஆபிர காம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சேகரத் தலைவர் ஜான் சாமுவேல் செய்திருந்தார்.