தூத்துக்குடியில் மது குடித்த கல்லூரி மாணவர் மரணம்.!

student news

தூத்துக்குடியில் மது குடித்த கல்லூரி மாணவர் மரணம்.!

மது மூலம் ஏற்படும் இழப்புகளே பெரும்பாலும் சமீபத்திய செய்திகளாக இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 61 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிறகு மது விற்பனை குறித்த விவாதமே தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தொழிலாளர்களை தாண்டி மாணவர்களும் மது குடிக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக இப்போது தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் ஒருவர் மது குடித்த நிலையில் இறந்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சக்தி விநாயகர்புரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிசுதாகர்(19). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். நேற்று அவர் வீட்டிற்கு வந்தபோது மது குடித்திருந்தார் என்று கூறப்படுகிறது. அப்போது தனக்கு தலைவலிப்பதாக கூறியிருக்கிறார்.

குடும்பத்தினர் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழங்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.