போராட்டங்களுக்கு அனுமதி வழங்க விரைவில் விதிமுறைகள் ஜகோர்ட்

HIGH COURT

போராட்டங்களுக்கு அனுமதி வழங்க விரைவில் விதிமுறைகள் ஜகோர்ட்

போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, விதிமுறைகள் வகுத்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலை., மாணவி மீதான பாலியல் வன்முறை சம்பவத்தைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பா.ம.க., சார்பில், ஜனவரியில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கு அனுமதி கோரிய  விண்ணப்பத்தை நிராகரித்த காவல்துறை ஐந்து நாட்களுக்கு முன்பு விண்ணப்பம் செய்ய வேண்டும் எனக் கூறி, போராட்டத்துக்கு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து பா.ம.க கொள்கை பரப்பு செயலாளர் பி.கே.சேகர்  வழக்கு தொடர்ந்தார். மனுவில் கவர்னருக்கு எதிரான போராட்டத்திற்கு, எந்த கட்டுப்பாடு  இல்லாமலும் விண்ணப்பம் பெறாமலும் ஆளுங்கட்சியினருக்கு சென்னை மாநகர போலீஸ் கமினர் அனுமதி வழங்கியுள்ளார். போராட்டங்களுக்கு, ஜந்து நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என்ற சட்டவிதியைமீறி செயல்பட்ட மாநகர கமினர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, உள்துறை செயலர் டி.ஜி.பி.. க்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல் முருகன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது. மாநகர போலீஸ் கமினர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் தி.மு.க போராட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. அனுமதியின்றி போராட்டத்தில ஈடுபட்ட தி.மு.க., வினருக்கு எதிராக  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என  தெரிவிக்கப்பட்டது.

அப்போது, மனுதாரர் தரப்பில், பாமக., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்  அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டனர். ஆனால் தி.மு.கவினர் கைது செய்யப்படவில்லை. அவர்களின் போராட்டத்தை தடுக்கவும் இல்லை என வாதிடப் பட்டது. அதற்கு காவல் துறை தரப்பில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை யும் கேட்டநீதிபதி வேல்முருகன் “விதிமுறைகளை ஆளுங்கட்சி எதிர்கட்சி என்ற பாகுபாடு  காட்டாமல் அனைவருக்கும் சமமான முறையில்  அமல்படுத்த வேண்டும். ஆட்சிகள் மாறினாலும். ஆதிகாரிகள் நீடிப்பர் எவரும் சட்டத்துக்கு மோலானவர்கள் அல்ல.  காவல்துறையினர் பாரபட்சம் காட்டக்கூடாது. எதிர்காலத்தில் இது போல நடந்து கொள்ளக்கூடாது என அறிவுறுத்தினார்.

மேலும் “ போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விதிமுறைகள் வகுத்து உத்தரவு  பிறப்பிக்கப்படும்” என தெரிவித்த நீதிபதி பி.வேல்முருகன், போராட்டத்துக்கு அனுமதி வழங்காதது தொடர்பான மற்றொரு மனுவையும் விசாரித்து தீர்ப்பு அளிக்க உள்ளதாகக்கூறி பா.ம.க ., மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.