காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரிப்பு முதியோர்களே தடுப்பூசி போடுங்க
Fever News

குளிர்கால பாதிப்புகள் அதிகரித்து இருப்பதால் முதியோர், ஆஸ்துமா பாதிப்பு உடையோர், நிமோனியா தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் குளிர் கால இருமல், சளி. காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் நோய் எதிர்ப்பு குறைந்தவர்கள், தான் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக டாக்டர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுநல டாக்டர் நந்தகுமார் கூறியதாவது : நோய் அதிகம் இல்லாதவர்கள் சளி,இருமல் சளி இருமலால் பாதிக்கப்படுப்படுகின்றனர். அவர்கள் கீரை, வகைகள் , பழங்கள் , காய்கறிகள் ,பழங்களில் காய்க்கறிகளை அதிகம் உட் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, முச்சிப்பயிற்சி செய்யவதன் வாயிலாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அடிக்கடிகைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் போன்றவை வழியாகவும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.
பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தற்போதைய தட்பவெப்ப நிலை மாற்றத்தால், இணை நோயாளிகள் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், ஆஸ்துமா நோயாளிகள், மூச்சு தொந்தரவு இருப்போர், நிமேனியா, இன்புளுயன்ஸ் தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இவை கட்டாயம் கிடையாது. அதேநேரம், போட்டுக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.