ஆரம்ப சுகாதாரநிலையம் பழுதடைந்து 10 வருஷமாச்சு..சாயர்புரம் அருகே மக்கள் அவதி

Primary Health Centre

ஆரம்ப சுகாதாரநிலையம் பழுதடைந்து 10 வருஷமாச்சு..சாயர்புரம் அருகே மக்கள் அவதி

ஆரம்ப சுகாதாரநிலையம் பழுதடைந்து 10 வருஷமாச்சு..சாயர்புரம் அருகே மக்கள் அவதி   

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே சேர்வைகாரன்மடம் ஊராட்சியில் செந்தியம்பலம் கிராமம். இங்கு நெசவாளர்கள் உள்பட சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 37 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. அது பழுதடைந்து 10 வருடங்களாக பயன்படுத்த முடியாமல் மூடிக்கிடக்கிறது. அங்கு செவிலியர் தங்கி சேவை செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனை ரூ.9 லட்சம் செலவில் சீரமைக்க கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் சீரமைக்க முடியாத நிலையில் உள்ளது. புதிய கட்டிடமே கட்டித்தரவேண்டும் என்று சேர்வைகாரன்மடம் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சண்முகையா எம் எல் ஏ விடம் வலியுத்தி வந்தனர். 

இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அக்கட்டிடம் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. உபயோகப்படுத்த முடியாது, இடித்துவிட்டு புதிய கட்டிடமே கட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் அதற்கான உத்தரவை பிறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 6மாதத்திற்கு மேலாக இதற்கான பணிகள் தொடங்கப்படுவதாக தெரியவில்லை என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்களும்,கோரிக்கை வைத்து வரும் ஏஞ்சலின் ஜெனிட்டாவும். 

விரைவில் வேலையை தொடங்குங்க சார்..