தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு ஆயுர்வேத சிகிச்சை முகாம்

AYURVEDA TREATMENT

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு ஆயுர்வேத சிகிச்சை முகாம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. 

8வது தேசிய ஆயுர் வேத தினத்தைமுன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆயுர் வேதா பிரிவு சார்பில் சிறப்பு ஆயுர்வேத சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் ஆரோக்கியத்திற்கான ஆயுர் வேதம் என்ற தலைப்பில் ஆயுர் வேத மருத்துவ அலுவலர் ஜான்மோசஸ் ஆலோசனை வழங்கி பேசினார். முகாமில் பங்குபெற்ற அனைவருக்கும் ஆயுர் வேத கசாயம் மற்றும் மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் லதா, மருந்தாளுநர்கள் சுப்புலட்சுமி, சாந்தி,சுமித்ரா, மருத்துவ பணியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இதேப்போன்று குளத்தூர் அருகே உள்ள பேரிலோவன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத பிரிவு சார்பில் அங்குள்ள நல்லழகு நாடார் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் ஆயுர்வேதம் என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர், மாணவியருக்கு ஆயுர் வேத மருத்துவர் ஜான் மோசஸ் பரிசு வழங்கினார். மேலும் மாணவ, மாணவியருக்கு ஆயுர்வேத மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் பள்ளி தலமை ஆசிரியைகள் ரெஜிலா, ஜான்சிராணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.