தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல குருவானவர்கள் குடும்ப கிறிஸ்துமஸ் கூடுகை!

nazareth

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல குருவானவர்கள் குடும்ப கிறிஸ்துமஸ் கூடுகை!

நாசரேத்,டிச.04:தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல குருவானவர்கள் குடும்பத் தினர்களின் கிறிஸ்துமஸ் கூடுகை நடைபெற்றது.

தூத்துக்குடி-நாசரேத் திரு மண்டல குருவானவர்கள் குடும்பத்தினர்களின் கிறி ஸ்துமஸ் கூடுகை சண்முக புரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் வைத்து நடைபெற்றது. தூத்துக்குடி-நாசரேத் திரு மண்டல பிரதமப் பேராயர் பொறுப்பாளரும் கோவை திருமண்டல பேராயருமான தீமோத்தேயூரவீந்தர் கிறிஸ் துமஸ் செய்தி வழங்கினார். திருமண்டல உபதலைவர் தமிழ்ச்செல்வன் குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக், லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட நாசரேத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்ப டும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றம்,சாத்தான்குளத்தைதலைமையி டமாகக்கொண்டு செயல்படும் தாவீது சுந்தரனார் சபை மன்றம், மெஞ்ஞான புரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜாண்தாமஸ்சபைமன்றம், சாயர்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் டாக்டர் ஜி.யூ. போப் சபை மன்றம், கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு செயல் படும் ரெவரென்ட் ரக்லண்டு சபை மன் றம், தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஷப் ராபர்ட்  கால்டுவெல் சபை மன்றம் ஆகிய சபை மன்றங்களில் உள்ள குருவானவர்கள், குருவானவர்களின் குடும்பத்தினர்கள் சிறப்பு பாடல்கள் பாடினர்.சிறப்பு வேத பகுதிகள் வாசித்தனர்.நிறைவாக பேராயர் தீமோத்தேயூ ரவீந்தர் ஆசி வழங்கினார்.