சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15)முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிக்கிறது! சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாறுகிறது!!

சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15)முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிக்கிறது! சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாறுகிறது!!

நாசரேத்,ஆக.09:செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரதினம் அன்று முதல் வேகம் அதிகரிக்கப்பட்டு சூப்பர் பாஸ்ட் இரயிலாக மாற்றம் செய்யப்பட உள்ளது. 

இது குறித்து தென்னக ரயில்வே செய்தி குறிப்பில், ’’செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலானது சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் இடையே வண்டி எண். 16105 எனவும்  திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் இடையே வண்டி எண் 16106 எனவும்  தினந்தோறும் இயங்கி வருகிறது. வரும் சுதந்திரத்தினம் (ஆகஸ்ட் 15ஆம் தேதி) முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலின் வேகம் அதிகரிப்பட்டு செந்தூர் சூப்பர் பாஸ்ட் இரயிலாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த இரயில் வண்டி எண்20605ஆனது சென்னை எழும்பூர்-இரயில் நிலையத் தில் இருந்து மாலை 4:10 ம ணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:10 மணிக்கு திருச் செந்தூர் இரயில் நிலையத் தை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 20606 இரயில் திருச் செந்தூரில் இருந்து இரவு 8:25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 10:25 மணிக்குசென்றடையும்’’ என தென்னக இர யில்வே தெரிவித்துள்ளது.