தூத்துக்குடியில் அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற மெடிக்கல் ரெப் பலியானார்

accident

தூத்துக்குடியில் அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற மெடிக்கல் ரெப் பலியானார்

தூத்துக்குடியில் அரசு பஸ் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற மெடிக்கல் ரெப் பலியானார். 

தூத்துக்குடி லெவஞ்சிபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் சின்னராஜா மகன் அன்பு ஆனந்த்(28). மெடிக்கல் ரெப் ஆக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் பணி நிம்மித்தமாக இன்று(24.05.2024)மதியம் தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் தெற்கு நோக்கி பைக்கில் சென்றார். அப்போது அதே வழியில் மதுரையில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்காக வந்த அரசு பஸும், அன்பு ஆனந்த்-ன் பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் கீழே விழுந்த அன்பு ஆனந்த் பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். மத்திய பாகம் போலீசுக்கும், 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். சுமார் அரை மணி நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. அன்பு ஆனந்த்தை அவர்கள் சோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே அங்கு வந்த போலீசார் அன்பு ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏழ்மை நிலையில் உள்ள தனது குடும்பத்திற்காகவும், தனது ஒரே தங்கைக்காகவும் அன்பு ஆனந்த் பணியாற்றி வந்தார். இதுவரை அவருக்கு திருமணம் ஆகவில்லை என்று உறவினர் தெரிவித்தனர்.