தேசிய பேரிடர் என்கிற அறிவிப்பு விவகாரத்தில் நடைமுறையில் இல்லாததை சொல்லி திமுக அரசியல் செய்கிறது - Dr.K. சுதா

Dr.K.Sudha

தேசிய பேரிடர் என்கிற அறிவிப்பு விவகாரத்தில் நடைமுறையில் இல்லாததை சொல்லி திமுக அரசியல் செய்கிறது -  Dr.K. சுதா

தேசிய பேரிடர் என்கிற அறிவிப்பு விவகாரத்தில் நடைமுறையில் இல்லாததை சொல்லி திமுக அரசியல் செய்கிறது என்று கல்வியாளரும், டாக்டருமான கே.சுதா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : 

தேசிய பேரிடர் என்று ஒரு குறிப்பிட்ட பேரிடரை அறிவிப்பது நடைமுறையில் இல்லை மற்றும் இதுவரையில் மத்திய அரசு எந்த மாநிலத்திலும் நடந்த பேரிடரை தேசிய பேரிடராக அறிவித்ததுமில்லை - என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது வரவேற்கதக்கது. இவ்வாறு இவர்கள் கூறியிருப்பதை, திராவிட கட்சியினர் விமர்சிப்பது  வருந்ததக்கது மற்றும் கண்டிக்கத்தக்கது.

ஒரு பேரிடரை தேசிய பேரிடர் என்று மாநில அரசு கருத விரும்பினால், அதற்கான guidelines இருக்கிறது. அவை எதற்கெல்லாம் என்றால் ஒரு இயற்கை பேரழிவில் பூகம்பம், வெள்ளம், நிலச்சரிவு, சூறாவளி, சுனாமி, நகர்ப்புற வெள்ளம் ஆகியவை அடங்கும். மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு அணு, உயிரியல் மற்றும் இரசாயனமாக இருக்கலாம்.

இதையெல்லாம் அறியாத தெரிந்து வைத்திருக்காத தற்குறிகளாய் திமுக வினர் இருந்து விட்டு மற்றவர்களை குறை கூறுவது  வேடிக்கையாக தான் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் மாநில பேரிடர் நிதிக்கு மத்திய பேரிடர் நிதியில் இருந்து பணம் வழங்குவது உண்டு. இந்த நிதியாண்டில் ரூ.813.15 கோடி தமிழக அரசிடம் இருந்துள்ளது. இந்த வருடத்துக்கு மாநில பேரிடர் நிதிக்கு மத்திய அரசு ரூ.900 கோடி கொடுக்க வேண்டியது. இதில் முதல் தவணையாக ரூ.450 கோடியை இந்த புயல் வருவதுக்கு முன்னதாகவே கொடுக்கபட்டது. இரண்டாவது தவணையாக மீதமுள்ள ரூ.450 கோடியை தென்மாவட்ட மழை வெள்ளம் ஏற்படும் முன்னதாகவே டிசம்பர் 12ம் தேதி கொடுத்துவிட்டார்கள். தென்மாவட்ட வெள்ளம் ஏற்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே மாநில அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை தகவல் கொடுக்கப்படவில்லை என்பது தவறு.

மழை பெய்து நான்கு நாட்கள் கழித்து  தண்ணீரை மோட்டார் பம்பு மூலம்  எடுத்து தெருக்களில் ஊற்றுகிறார்கள். மழை பெய்து நான்கு நாட்கள் கழித்து மின்சாரம் வருகிறது, தண்ணீர் சப்ளை இன்னும் செய்யவில்லை. தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளோ அல்லது மாமன்ற உறுப்பினர்களோ யாருமே களத்தில் வந்து மக்களை பாதுகாக்க வரவில்லை.

மக்கள் மழை, வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும்போது தமிழக முதல்வர் என்ன செய்துகொண்டிருந்தார். தேசிய பேரிடர் மீட்புப் படையை டெல்லியில் இருந்து மத்திய அரசு தென்மாவட்டங்களுக்கு அனுப்பியது.

மாநிலப் பேரிடராக அறிவிக்க விரும்பினால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும். மத்திய அரசின் பரிந்துரைகளை பெற்று மாநில அரசால் ‘மாநிலப் பேரிடர்’ என அறிவிக்க முடியும். மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை பெற்று மாநில அரசு பேரிடராக அறிவிக்கும் பட்சத்தில் மாநில அரசின் பேரிடர் நிதியில் இருந்து 10 சதவீதத்தை அந்த பேரிடருக்கு பயன்படுத்தவும் முடியும்.

சாதாரணமாக ஒரு வெள்ளம் ஏற்படும்போது வெள்ள நீர் வடிந்த பிறகுதான் மத்திய அரசின் கணக்கெடுப்பு துறைகள் செல்லும். ஆனால், தென்மாவட்ட மழை வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் மத்திய அரசின் குழு 19-ம் தேதி மாலையே நிலைமையை கண்காணிக்க சென்றுவிட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை இவை அனைத்தும் 5,049 பேரை மீட்டுள்ளனர்.

கடற்படையும் ஜெமினி படகுகளையும் நவீன ஹெலிகாப்டர்களையும் கொண்டு மீட்புப் பணிகளை செய்துள்ளன. இப்படியாக மத்திய அரசின் படைகள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கியதால் நிறைய பேரை மீட்க முடிந்தது.தேசிய பேரிடர் என்கிற அறிவிப்பு விவகாரத்தில் நடைமுறையில் இல்லாததை சொல்லி திமுக அரசியல் செய்கிறது. 

Dr.K. சுதா, கல்வியாளர்.