தூத்துக்குடியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு கூட்டம் நடந்தது

thoothukudi collector

தூத்துக்குடியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு கூட்டம் நடந்தது

தூத்துக்குடியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு 2023-2024 தூத்துக்குடியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு 2023-2024 தணிக்கை பத்திகள் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடும் கூட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (06.03.2024) தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு 2023-2024 தணிக்கை பத்திகள் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சவுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். குழு உறுப்பினர்கள் உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிலீஜீ, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சவுந்தரபாண்டியன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாலீஜீயம், தூத்துக்குடி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தாட்கோ, தூத்துக்குடி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், தூத்துக்குடி ஆகிய நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினர்.