முதல்வரின் நீங்கள் நலமா? திட்டத்தின் மூலம் பயனாளிகளிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி

Thoothukudi collector

முதல்வரின் நீங்கள் நலமா? திட்டத்தின் மூலம் பயனாளிகளிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'நீங்கள் நலமா?' என்ற புதிய திட்டத்தை இன்று (06.03.2024) தொடங்கி வைத்தார். அததைத் தொடர்ந்து  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அறிவித்த திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ள பயனாளிகளிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களான  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஆகியவற்றின் மூலம் பயனடைந்த பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தொலைபேசி மூலமாக உரையாடி பயனாளிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் பெற்ற பயனாளிகள் கூறிய கருத்துக்கள் 'நீங்கள் நலமா?' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.