கனிமொழி எளிதில் சந்திக்க முடியாதவர் - நாசரேத்தில் சிவசாமி வேலுமணி

election news

கனிமொழி எளிதில் சந்திக்க முடியாதவர் -  நாசரேத்தில் சிவசாமி வேலுமணி

நாசரேத்,ஏப்.06: தூத்துக்குடி பாராளு மன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை எளிதில் சந்தி முடியாதவர் என்றும் தங்கத்தட்டில் சாப்பிடக் கூடியவர் என்றும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சிவசாமிவேலுமணி நாசரேத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார்.

தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதிஅதிமுகவேட்பாளர் ஆர்.சி வசாமி வேலுமணி திருச்செந்தூர் ச ட்டமன்றதொகுதிகுட்பட்ட ஆழ்வார் திருநகரி கிழக்குஒன்றியத்தில் இர ட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண் டார். அவர் நாசரேத்பேரூராட்சி 1-வது வார்டு வெள்ளரிக்காயூரணியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை மேற் கொண்டார். பிரகாசபுரம்,கே.வி.கே.சாமி சிலை பஜார், நாசரேத் பஸ் ஸ்டா ண்ட், சந்தி பஜார், புனித லூக்கா மருத்துவமனை,கைலாசபுரம் தெரு, வாழையடி, அகப்பைக்குளம், திரும றையூர்,சந்தை பஜார்,மேல வகுத் தான்குப்பம்,மில் ரோடு,மணிநகர், திருவள்ளுவர் காலனி,ஞானராஜ் நகர்,மூக்குப்பிறி,ஒய்யான்குடி,பாட்டக்கரை,கச்சனாவிளை,துரைசாமிபுரம்,நெய்விளை,புன்னையடி,இடை யன்விளை,சாமி நகர், நாலுமாவடி ஆகிய கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.

நாசரேத் பேருந்து நிலையம் அருகில் கூடியிருந்த மக்களிடையே அவர்பேசுகையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்டெடுத்த  இரட்டை இலை சின்னத்தில் புரட்சித் தலைவி அம்மா ஆசியுடன் தூத்துக்குடி தெற்குமாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் அவர்களின் ஆதரவோடு ரெட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேக ரித்து வருகிறோம். திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி கரு ணாநிதியை அவ்வளவு எளிதாக யாரும் சந்திக்க முடியாது. தங்கத் தட்டில் சாப்பிடக் கூடியவர். நம்மை போல் ஏழை எளிய மக்களை கண்டு கொள்வதில்லை. ஏரல் அருகிலுள்ள பண்டாரவிளை கிராமத்தில் எளிமையாக வாழ்ந்து வருபவன். எளிதில் என்னை சந்திக்கலாம். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் அளித்து என்னை பெருவாரி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு கேட் டுக் கொள்கிறேன் என்று  பேசினார்.

வேட்பாளருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன், முன்னாள் அமைச் சர் பாண்டியராஜன்,அமைப்புச் செ யலாளர் சின்னத்துரை, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சுதாகர், டி.நகர் மாரியப்பன், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜய குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன்,நாசரேத்நகர அதி முக செயலாளர் கிங்சிலி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலா ளர் ஞானையா, மாவட்ட மகளிரணி செயலாளர்  ஜூலியட்,நாசரேத் நகர அவைத்தலைவர்சிவசுப்பு,துணைச் செயலாளர்முருகன்,ஒன்றியஇளை ஞரணி செயலாளர் பாலா,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் தினக ரன்,வார்டு செயலாளர்கள் செல்வக் குமார்,செல்வின் விக்டர்,பெல்வின், மாவட்ட அவைதலைவர் திருப்பாற் கடல், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம் பலம்,ராஜ்குமார்,கிருபா,முருகேசன், ஜெபா உட்பட பலர் கலந்து கொண் டனர்.