பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா!
nazareth news

நாசரேத்,ஜன.16:பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஆராதனை நடந்தது. பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமை வகித்து திருப்பலி ஆராத னையை நடத்தினார். தொடர்ந்து ஆலய வளாகத் தில் பொங்கலிட்டு கொண் டாடப்பட்டது. இதில் இறை மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையில் இறைமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.