''அறிவிப்பு பலகை இருப்பது கண்ணுக்கு தெரியவில்லையே'' : தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் திணறல்

National High way

''அறிவிப்பு பலகை இருப்பது கண்ணுக்கு தெரியவில்லையே'' : தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் திணறல்

தூத்துக்குடி, திருநெல்வேலி என இரண்டுமே பெரிய மாநகராட்சிகள். இந்த இரண்டு மாநகரங்களையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ராமஸ்வரம், தென்காசி, கன்னியாகுமரி என பல முனை வழித்தடத்திற்கும் முக்கியமானதாகும். முக்கியத்துவம் வாய்ந்த தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் பகுதியில் புதிதாக பாலம் கட்டும் வேலை நடந்து வருகிறது. இந்த வேலை வேகமாக நடந்து வருகிறது. அது வரவேற்கவேண்டிய விசயம். 

அதேவேளை, இரவில் தூத்துக்குடி நோக்கி செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்கள் திடீர் பதற்றமடைவதை பார்க்க முடிகிறது. அதாவது வேலை நடைபெறுகிறது என்கிற அர்த்தம் கொண்ட அறிவிப்பு அந்த இடத்தில் மட்டும் சிறிய அளவில் வைக்கப்பட்டுள்ளது. சற்றும் தூரத்திலேயே பாலம் வேலை நடைபெறுகிறது, மெதுவாக செல்லவும் என்பது போன்ற வாசங்கள் கொண்ட அறிவிப்பு எதுவும் இல்லை. அதனால் புதிதாக இந்த சாலையில் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு அந்த இடம் தூரத்தில் இருந்து தெரிவதில்லை. மிக அருகில் வந்த பிறகே தெரிந்து கொள்ள முடிவதால் பதற்றத்துடன் வாகனத்தை செலுத்துகின்றனர். இது எப்போதும் சரியாக இருக்கும் என்று நினைத்துவிட முடியாது. சற்று கவனக்குறைவானால் வாகனம் விபத்தில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

எனவே சற்று முன்னதாகவே அறிவிப்பு போர்டு வைக்க வேண்டும் அல்லது அந்த இடத்தில் பெரிய அளவில் அறிவிப்பு போர்டு வைக்க வேண்டும். இந்த கோரிக்கையை தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் விரும்புகிறார்கள்.