பா.ஜ.க 305 தொகுதிகளில் வெற்றி பெறும் - அமெரிக்க அரசியல் ஆய்வாளர் கருத்து

BJP NEWS

பா.ஜ.க 305 தொகுதிகளில் வெற்றி பெறும்  - அமெரிக்க அரசியல் ஆய்வாளர் கருத்து

பாஜக 305 தொகுதிகளில் வெற்றி பெறும்  என்று அமெரிக்க அரசியல் ஆய்வாளர் இயான் ஆர்தர் பிரிம்மர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய பொருளாதாரம் சிறப்பாக இடத்தில் இருந்து வருகிறது.  இந்தியாவில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 305 இடங்களில் வெற்றி பெறும் என பிரபல அமெரிக்க அரசியல் ஆய்வாளர் இயான் ஆர்தர் பிரிம்மர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல அரசியல் ஆய்வாளர், ஆலோசகர் மற்றும் விமர்சகர் இயான் ஆர்தர் பிரிப்பர். இவர் யுரேஷியா குரூப் குழும நிறுவன தலைவராக இருந்து வருகிறார். இந்திய பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் தற்போது பேட்டியளித்தார். அதில், இந்தியா மிகப்பெரிய ஜனநாயகதத்தை கொண்ட நாடு. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தலை நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடனும் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. ஜப்பான் இந்தியாவுடன் வலுவான நட்புறவு வைத்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவை நெருங்கி வருகின்றன. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் 305 இடங்களில் பாஜக வெற்றி பெறும். தற்போதைய பிரதமர் மோடியின் நிலையான சீர் திருத்தங்களின்  பின்னணியில் வலுவான பொருளாதார செயல் திறன் ஆகியவற்றால் 2030ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்’ என்று அவர் கூறினார் பிரிம்மர்.