திராவிடம் என்பது ஒரு மாயை - Dr. K. சுதா .

Dravidam oru maayai

திராவிடம் என்பது ஒரு மாயை - Dr. K. சுதா .

திராவிடம் என்பது இருப்பதை அழிப்பதும் ; இல்லாததை இருப்பது போல் சொல்வதும் தான் திராவிட மாடல் என்று கல்வியாளர் டாக்டர் கே.சுதா தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள்ள அறிக்கை : 

’நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரிகள் அல்ல; மனிதர்களை மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பிளவுபடுத்திப் பார்ப்போருக்கு மட்டுமே எதிரிகள். ஆன்மிகம் என்ற பெயரில், மத வெறியை, ஜாதி வெறியை துாண்டுவோர் ஆன்மிகவாதிகளாக இருக்க முடியாது; அவர்கள் ஆன்மிக வியாதிகள்' என்று, திருவண்ணாமலையில் நடந்த பொதுக் கூட்டத்தில்  முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அம்பேத்கர் பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடும் திராவிட செம்மல்கள், உயர் குடியில் பிறந்த தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. 'எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்; அதுதான் நாங்கள் போற்றும் சமூக நீதி' என்று சொல்லிக் கொண்டே, ஹிந்துக்களை மட்டும் அவமதிப்பர். ஹிந்து ஆன்மிகவாதிகளை ஆன்மிக வியாதிகள் என்று விமர்சிப்பர். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று இவர்கள் சொல்வது, தமிழர்களின் காதுகளில் பூச்சூடும் சமாச்சாரம் தான்.

ஹிந்து என்றால் திருடன் என்று இவர்களுக்கு, முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் இதுபோல் சொல்லும் துணிச்சல் உண்டா? தமிழை உண்மையில் வளர்த்தோர் திராவிடர்கள் அல்ல. தமிழை உண்மையில் வளர்த்தவர்கள் ஆன்மிகவாதிகளான ஆழ்வார்களும், நாயன்மார்களும் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழுக்கு பிராமணர்கள் பல நூற்றாண்டுகளாக செய்த தொண்டு ஏராளம். உ.வே.சுவாமிநாத ஐயர் இல்லையென்றால்   பல பண்டை தமிழ் இலக்கியங்கள் அழிந்து போய் இருக்கும்.

பெரும்பாலான மக்களக்கு அவரது தொண்டு தெரியாமல் இருட்டடிப்பு செய்து விட்டார்கள். திராவிடம் என்பதே ஏமாற்று வேலை. அது பிராமண எதிர்ப்பிற்காக ஏற்படுத்தபட்டது. அவர்களுடைய முக்கிய நோக்கமே பிராமண எதிர்ப்பும், அரசியல் நோக்கத்திற்காக சாதிகளை உயிரோடு வைத்திருப்பதும், திராவிடம் என்ற ஏமாற்று பெயரில் தமிழகத்தை ஆள்வதற்கும் தான். அவர்களுக்கு உண்மையான சமூக அக்கறை இல்லை. வார்டு கவுன்சிலர் தேர்தல் முதல் M.P தேர்தல், கட்சி பொறுப்புகள் வரை ஜாதி அடிப்படையில் தான் Seat கொடுக்கிறார்கள். இவர்களுக்கு தமிழ்மொழிப்பற்று துளியும் கிடையாது என்பது தான் உண்மை.

திராவிடம் பேசும் இவர்கள் தான் தமிழை வளர்த்தார்கள் என்ற மார்தட்டிக் கொள்கிறார்களே  உண்மையில் இந்த பட்டியலில் உள்ளவர்கள் தான் தமிழை வளர்த்தார்கள் என்று எத்தனை பேருக்குத் தெரியும். அந்த பணியில் இவர்கள் பட்ட பாடுகளும் அவமானங்களும் சொல்லி மாளாது.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, வீரமா முனிவர், புவர், போல்டிங், மைரன் உவின்சிலோ, எச்.ஆர் ஹொய்சிங்டன், ரேனியஸ், சாமுவேல் பிஸ்க் கிறீன், எல்லீஸ், துரு பாதிரியார், கால்டுவெல், சார்லஸ் கிரால், சாமுவேல் பிள்ளை, சைமன் காசிச் செட்டி, முர்டாக், ஹெச் பவார், பர்னல், ஜி.யூ.போப், ஆறுமுகநாவலர், தாமோதரம்பிள்ளை, சதாசிவம்பிள்ளை, உ.வே.சா., தியாகராஜ செட்டியார், ஹெச். கிருஷ்ணம்பிள்ளை, உமறுப் புலவர், ஆப்ரகாம் பண்டிதர், சுவாமி விபுலானந்தர், பாரதியார்,பாரதிதாசன், பாண்டித்துரை தேவர், திரு.வி.க., க.சு.பிள்ளை, வையாபுரிப் பிள்ளை, ரா.ராகவையங்கார், மால் கலைஞர், ரா.பி.சேதுப்பிள்ளை, மு.ராகவையங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், தெ.பொ.மீ., அவ்வை துரைசாமி பிள்ளை, தண்டபாணி தேசிகர், பொ.வே.சோமசுந்தரனார், மு.அருணாசலம், தி.வே.கோபாலய்யர் செய்கு தம்பி பாவலர், பேராசிரியர். காளமேகனார், நாமக்கல் கவிஞர். வெ.இராமலிங்கனார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை, இலக்குவணார், கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியனார், மு. வரதராசனார், வி.ஐ.சுப்பிரமணியன்,

தேவநாயப்பாவானர் சாலை இளந்திரையன்.......

இப்படி பல வெளிநாட்டவரும்  உள்நாட்டவருமாக பலர் தங்களுடைய வாழ்நாள் முழுமையும் தியாகம் செய்து பாடுபட்டு தமிழ்மொழியை வளர்த்தார்கள்.

இந்த வரலாற்றை  மக்களுக்கு தெரிய விடாமல் மறைத்தவர்கள் தான் திராவிடர்கள் அதற்காக  தமிழக பாடத்திட்டங்களிலும்,  பேருந்து நிலையங்களிலும் அண்ணா பெரியார் போன்றவர்களின் பெயர்களை தடம் பதித்தார்கள்.

 திராவிடம் என்றுமே பழைய வரலாற்றை மறைக்க பார்ப்பார்கள் புதிய வரலாறாக தேவையில்லாதவற்றை திணிக்க பார்ப்பார்கள்.

இது இன்று நேற்று மட்டும் நடைபெறும் பிரச்சனை அல்ல. இது திராவிடம் என்பது எப்பொழுது உதித்ததோ அப்பொழுதே  தோன்றிய காரிருள் தான்  திராவிடம். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த  பாண்டிய மன்னர்கள்,ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழன் வளர்க்காத தமிழையா இவர்கள் வளர்த்தார்கள்.

அனைத்து காவிய தமிழையும் காவியத்தையும் அளித்த சமூக நீதி என்ற பெயரில் சமூக அநீதிக்கு  அரணாக விளங்குபவர்கள் தான் திராவிடர்கள். நாம் இன்று ஒரு இடத்திற்கு செல்ல வழி அறியாமல் இணையதளத்தில் google மேப்பில் வழி பார்த்து செல்கின்றோம். ஆனால் சங்க கால இலக்கிய காவிய தலைவர்களோ, அவர்களின் அறிவியல் மதி நுட்பத்தால்  ஆமைகளின் வழித்தட நீரோட்டத்தை கண்டுபிடித்து   திசைகளை துல்லியமாக கண்டறிந்து அதன் மூலம்  கடல் வழி வாணிபம் செய்து  முன்னேறினர். இந்த வரலாற்று உண்மைகள் சிறப்பம்சங்கள் பலவற்றை மறைத்து மாணவர்களுக்கு தேவையில்லாத புதிய வரலாற்றை  உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இந்து விரோத அரசு,  தற்பொழுது தமிழ்நாடு போக்குவரத்து கழக ஆப் லோகோவில் அரசின் கோபுரச்சின்னம் அகற்றி வாய்மையே வெல்லும் என்ற வாசகத்தை மட்டும் வைத்து இருக்கின்றனர். ஆவின் பால் கவர் உட்பட அனைத்திலும் முதல்வரின் படத்தை ஒட்டி விளம்பரத்தை தேடுகின்றனர்.

 இனிமேலாவது இந்த திராவிட மாயையில் சிக்கித் தவிக்காமல், நமது அறிவீனத்தை இழந்து அநீதிக்கு துணை போகாமல், நமது வருங்கால சந்ததிக்கு நல்ல ஒரு சமுதாயத்தை அமைத்துக் கொடுப்போம் திராவிட மாயையை வேர் அறுப்போம்.

- Dr. K. சுதா