லேப்டாப் வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது - நினைவு படுத்துகிறது அதிமுக மாணவரணி
ADMK NEWS
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு தயாராகும் வேலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி லேப்டாப் வழங்கப்பட்டது. தற்போதைய திமுக ஆட்சியில் லேப்டாப் வழங்கப்படவில்லை. அதனை மாணவர்கள் மத்தியில் தெரிவிக்கும் வகையில் அதிமுக மாணவரணி சார்பில் அம்மா மடிக்கணினி லேப்டாப் சாதனை விளக்கத் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சிகள் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ் பி சண்முகநாதன் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் தூத்துக்குடி வ உ சி கல்லூரி, காமராஜ் கல்லூரி மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரி பாலிடெக்னிக் உள்ளிட்ட இடங்களில் மாணவர்களிடையே துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் தலைமை வகித்தார். அப்போது மாணவர்களிடம் பேசிய நிர்வாகிகள், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி லேப்டாப் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்து செயல்படுத்தினார். இத்திட்டத்தினால் ஏழை, எளிய பல லட்சம் மாணவர்கள் பயன் பெற்று இன்றும் கணினி அறிவில் சிறந்து விளங்குகின்றார்கள். ஜெயலலிதா மறைவிற்கு பின்பு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி வந்ததும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அதிரடியாக நிறுத்திவிட்டது. இதனால் ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்கும் மடிக்கணினி எளிதில் விலைக்கு வாங்க முடியாத நிலை உள்ளது. 2026 இல் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமையும் போது அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று கூறினர். இந்நிகழ்வில் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அலெக்ஸ் ஜி, துணை செயலாளர் ஈஸ்வர், மேற்கு பகுதி மாணவரணி செயலாளர் சுப்பிரமணி தலைமை கழக இளம் பேச்சாளர் பெவின்குமார் மற்றும் சகாயராஜா, சொக்கலிங்கம், உதயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
nadunilai.com