பெண்களுக்கான இலவச பஸ் பயணம் குறித்த பிரதமர் மோடியின் கருத்து - சரியானதே.!
Tnstc news
சுற்றுபுற சூழல் மாசுபடுவதன் காரணமாக பூமி வெப்பமடைவதை கட்டுப்படுத்த புது வகையான யுக்திகளை கையாள வேண்டும் என்கிற ஐநாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மாசுகட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்தியரசு மேற்கொண்டு வருகிறது. மின் உற்பத்தியை பொறுத்தவரை அனல், அணு என்பதற்கு பதிலாக சூரிய மின் சக்தியை அதிகபடுத்தும் வேலைகள் நடைபெற்று வருகிறது. வாகன புகையை கட்டுப்படுத்த பேட்டரி வாகனங்களை அறிமுகப்படுத்தி, அதனை பயன்படுத்தும்படி கூறிவருகிறது. பழைய வாகனங்களின் ஆயுட்காலம் முடிந்தபிறகு அதனை இயக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு பேருந்துகள் அதிகம் கழிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. அதுபோல் போக்குவரத்து நெருக்கடிகளை தவிர்க்க ரயில் பயணங்களை அதிகபடுத்த வேண்டும் என்று மத்தியரசு கருதுகிறது. இந்தநிலையில் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை அறிமுகப்படுத்தி தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களும் பின்பற்றும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
பொதுவாகவே பொது போக்குவரத்து வசதி என்பது சேவைக்கானது என்பதால் அதில் இருந்து அதிக வருமானம் வருவதில்லை. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்குகிறது என்றுதான் ஆண்டுதோறும் கணக்கு காண்பிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது பெண்களுக்கு இலவச பயணம் என்பது கூடுதல் நஷ்டத்தைத்தானே கொடுக்கும். தற்போதைய நிலையில் அரசு பேருந்துகளை பராமரிப்பதில் மிகுந்த சிரமத்தில் உள்ளனர் என்பதை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மூலம் கேட்க முடிகிறது. ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பணியாளர்கள் இல்லாமல் நிறைய வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள குறைகள் வெளியில் தெரியாமல் இருக்கிறது அவ்வளவுதான்.
சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாக்கும் பொருட்டு மத்தியரசு, தமிழகத்திற்கு 700 பேட்டரி பேருந்துகளை ஒதுக்கியது. ஆனால் அந்த பேருந்துகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. அதேவேளை தமிழக அரசு 500 பேட்டரி பேருந்துகளை வாங்குவதற்கு ஆர்ட்டர் போட்டிருக்கிறது. ஆக, பொது போக்குவரத்து சேவை நஷ்டத்தில் இயங்குகிறது. பேட்டரி பேருந்துகளை இயக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. பேருந்து கட்டணம் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இப்படி இருக்கும் போது இலவச பயணம் வழங்குவது எந்த அளவிற்கு தவறானது என்பதை பார்க்கலாம். இந்த இலவச போக்குவரத்து சேவையால் மற்ற போக்குவரத்து சேவைகள் அதிகம் பாதிக்கபட்டுள்ளது. மீதமுள்ள அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் இருந்து வரும் வருமானத்தில் இருந்துதான் இலவசத்துக்காக இயக்கப்படும் பேருந்துகளை பராமரிக்க வேண்டும். தனியார் பேருந்துகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. (கட்டண உயர்வை அரசு கண்டுகொள்ளவில்லை என்பதால், பல தனியார் பேருந்துகள் கட்டணத்தை தானாகவே கூட்டிக் கொண்டன. அதனால் அவர்கள் சமாளித்து ஓடுகின்றன).
இப்படியாக சுற்றுசூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் பெண்களுக்கான இலவச பேருந்து வசதியை அனைவரும் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. உண்மையில் நாட்டு நலன் மீது அக்கறை கொண்ட யாரும் ஆதரிக்கமாட்டார்கள். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை தேர்தலை எதிர்பார்ப்போர் ஆதரிப்பர் அவ்வளவுதான். அந்த வகையில்தான் பிரதமர் மோடியும் இந்த இலவச திட்டத்தை ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது. தேர்தல் பிரசாரத்தில் சுற்றுசூழல் மற்றும் பொருளாதார சிக்கலை மையமாக வைத்து பேசியிருக்கிறார். ஆனால் எதிர்கட்சிகள் வழக்கம்போல் எதிர்த்து வருகின்றன. மோடியின் வாதம் எந்த வகையிலும் தவறில்லை. வருமானமே வராமல் செலவு மட்டுமே செய்யும் எந்த நிர்வாகமும் நிலையானதாக இருக்க முடியாது. அது அனைத்தையும் அடியோடு அழித்துவிடும். எனவே தமிழ் நாடு அரசு போக்குவரத்தில் உள்ள பெண்களுக்கான இலவச திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றினால் அவர்களுக்கும் அதுதான் கதி.
இதற்கிடையே தமிழகத்தில் உள்ள திமுக ஆதரவு அரசியல் கட்சிகள், டில்லியில் உள்ள கெஜ்ரிவால் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியின் கருத்தை கண்டித்துள்ளனர். இதெல்லாம் அரசியல் லாபத்திற்காக என்றுதான் பொதுமக்கள் கருதுகின்றனர்.