ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணி ஜரூர்.!

Thoothukudi A.D.M.K

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணி ஜரூர்.!

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறை வாய்ப்பை இழந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வருங்காலங்களில் தொகுதை கைப்பற்ற வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் தெற்கு மாவட்டத்தில் இருந்து அதிமுகவிற்கு அதிக வாக்குகளை பெற வேண்டும் என்றும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள தனக்கான நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்பும் அவர், தீவிரமாக கட்சி பணியில் சுழல்கிறார். அந்த வகையில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்து தமிழக சட்டமன்ற தொகுதி வாரியாக அந்தந்த மாவட்டங்களில் அதிமுக பூத் கமிட்டி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி அமைக்கும் பணி வாக்குச்சாவடி வாரியாக நடைபெற்று வருகிறது. இதற்கென அதிமுக மாவட்ட வாரியாக மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள் மற்றும் சாயர்புரம், பெருங்குளம், ஏரல், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பேரூராட்சிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் சாயர்புரம், பெருங்குளம், ஏரல், முக்காணி, சிவகளை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் இன்று நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் சி.காசிராஜன், பேரூராட்சி கழக செயலாளர்கள் துரைசாமி ராஜா, வேதமாணிக்கம், அசோக்குமார், எஸ்.காசிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட அதிமுக அமைப்புச் செயலாளரும் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான பி.ஜி. ராஜேந்திரன் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு மேற்கு ஒன்றியங்கள், சாயர்புரம் பெருங்குளம், ஏரல், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பேரூராட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்கு சாவடிகளுக்கான அதிமுக பூத் கமிட்டியை பார்வையிட்டு சரிபார்த்து ஒப்புதல் வழங்கினார். இதன் இறுதி வடிவம் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பார்வைக்கு அனுப்பப்படுகிறது. 

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஒன்றிய அவை தலைவர் கணேசன், சிவகளை கிளைச் செயலாளர் நாராயணன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சுதர்சன் ராஜா, கூட்டுறவு சங்கத் தலைவர் பி.டி. பால்ராஜ், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் அன்னை சரவணன், யூனியன் சேர்மன் வசந்தாமணி, துணை சேர்மன் விஜயன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், முன்னாள் தொகுதி இணைச்செயலாளர் எம்.பெருமாள், இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட வர்த்தக அணி தலைவர் திருத்துவ சிங், சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் எப்ராயீம், பெருங்குளம் வார்டு செயலாளர்கள் பண்டாரவிளை பாஸ்கர், பொன் செல்வராஜ், மாணிக்கம், பால் துரை, முக்காணி நாராயணன், யூனியன் கவுன்சிலர்கள் ரமேஷ், முத்து செல்வன், வழக்கறிஞர் அணி இணை செயலாளர் கருப்பசாமி, வெள்ளூர் சொர்ண பாண்டியன், முன்னாள் நகர செயலாளர் பால்துரை, பத்மநாபமங்கலம் சுப்பையா, தோழப்பன் பண்ணை பெரியசாமி, தோழப்பன் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் இசக்கி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், பத்மநாபமங்கலம் குமார், வெள்ளூர் பொன்ராஜ், கிளை செயலாளர்கள் வெள்ளூர் முத்தையா, மாரியப்பன், அங்கப்பன், மாவட்ட பிரதிநிதி இசக்கி முத்து, வார்டு செயலாளர்கள் எஸ்.டி.டி. ரவி, பொன்னுதுரை, இருளப்பன், ஆப்பிள் ராமசாமி, திருவாழ்மார்பன் அண்ணா தொழிற்சங்கம் கே.டி.சி. சுப்பிரமணியன், பண்டாரவிளை சுரேஷ், பெருமாள், சேர்மராஜா, பண்டாரவிளை கோபால், லிங்கபாண்டி, துரை, ராசு குட்டி, சிவா, ஜெபராஜ், அடைக்கலாபுரம் இருதயராஜ், உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடி வாரியாக குழு, குழுவாக கலந்து கொண்டனர்.