சாத்தான்குளம் பேருந்து பணிமனை எப்போது டெவலப் செய்யப்படும்? - பொதுமக்கள் கேள்விக்கு அமைச்சர் பதில் என்ன?

sathankulam

சாத்தான்குளம் பேருந்து பணிமனை எப்போது டெவலப்  செய்யப்படும்? - பொதுமக்கள் கேள்விக்கு அமைச்சர் பதில் என்ன?

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி சாத்தான்குளம் - நாசரேத் இடையே தனியார் தானமாக வழங்கிய நிலத்தில் சுமார் ரூ.1.10 கோடி மதிப்பில் அரசு பேருந்து பணிமனை கட்டப்பட்டது. அடுத்து வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை திறந்து வைத்தார். திசையன்விளை,நெல்லை மற்றும் திருச்செந்தூர்,ஸ்ரீவைகுண்டம் பணிமனையை சேர்ந்தது என சுமார் 7 பேருந்துகள் சாத்தான்குளம்  பணிமனைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து இயக்கப்பட்டது.

 

அன்றிலிருந்து இன்றுவரை சில பேருந்துகளே அந்த பணிமனையில் இருந்து இயக்கபடுகிறது. முழுவதுமாக அது பணிமனையாக செயல்பட வில்லை. குறைவான பேருந்துகளை வைத்து ஏதோ கடமைக்காக இயங்கி வருவதாகவே தெரிகிறது. திமுக ஆட்சி வந்ததும் கூடுதல் பேருந்துகளை இங்கிருந்து இயக்க போவதாக சொன்னார்கள். அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் அதிகாரிகள் இந்த பணிமனையை ஆய்வு செய்தனர். 

அங்கிருந்தே போக்குவரத்துதுறையின் அப்போதைய அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் செல்போனில் பேசிவிட்டு, மிக விரைவில் இந்த பணிமனையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
உறுதியளித்தார். ஆனால் தற்போது வரை அது நிறைவேறவில்லை. 10 பேருந்துகளை கூட இங்கிருந்து முழுமையாக இயக்க வில்லை. 

அப்படியானால் அமைச்சர், எம்எல்ஏ ஆகியோர் கொடுத்த உறுதிமொழி என்னாயிற்று? அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?.என்று பொதுமக்கள் கேள்வி கேட்க துவங்கி உள்ளனர். பணிமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்கிற குற்றசாட்டும் தொடர் கதையாக இருந்து வருகிறது. 

எதற்காக அப்பணிமனை யின் முன்னேற்ற பணி நடக்கவில்லை என்று யாருக்கும் தெரியவில்லை. அதேவேளை, அப்பகுதியில் இயக்கப்படும் தனியார் பேருந்து நிர்வாகங்களின் குறுக்கீடுகளால்தான் இந்த பேருந்து டெப்போ டெவலப் பணிகள் நடக்கவில்லையோ என்று பொதுமக்கள் சந்தேகம் கொள்கின்றனர். குறிப்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,  அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் இதற்காக எடுத்த நடவடிக்கை என்ன என்று பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள்?.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. இது குறித்த விளக்கத்தை அமைச்சர் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். பதில் அளிப்பாரா அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்?