பாஜக தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் - தெற்கு மாவட்ட பாஜக அசத்தல்

Bjp news

பாஜக தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் - தெற்கு மாவட்ட பாஜக அசத்தல்

சமீப காலமாக தீபாவளி பண்டிகை வந்துவிட்டால் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி தொண்டர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி குளிர்த்து வருகின்றனர். அதிலும் கொஞ்சம் கூடுதலாக திமுக உள்ளிட்ட சில கட்சிகள் நிர்வாகிகளுக்கு பணமும் கொடுத்து பாராட்டை பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது தேசிய கட்சியான பாஜகவும் இடம்பெற்றிருக்கிறது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பாஜக தரப்பிலும் புத்தாடைகள் மற்றும் இனிப்பு வகைகளை கொடுத்து அசத்தும் நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது.    

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மண்டலக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிளை தலைவர்கள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் சேது பாதையில் உள்ள அம்மு மஹாலில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், மாவட்டத் துணைத் தலைவர்கள் முத்துராமலிங்கம், சிவராமன், நவமணிகண்டன்,  முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் கேஎன்ஆர் பரமசிவம், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், வடக்கு மண்டல் தலைவர் சுதா, கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மேற்கு மண்டல தலைவர் லிங்க செல்வம், திருச்செந்தூர் மண்டல் தலைவர் செல்வகுமாரன்,  வடக்கு மண்டல் பிரபாரி சரவணன், கிழக்கு மண்டல் பிரபாரி சத்தியசீலன், ஏரல் மண்டல் பிரபாரி காளிராஜா, வடக்கு மண்டல் முன்னாள் மண்டல தலைவர் சிவராமன், விருந்தோம்பல் பிரிவு முன்னாள் மாநில செயலாளர் பாலமுருகன்,

ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், வடக்கு மண்டல பொதுச் செயலாளர் சங்கர்கணேஷ், மகளிர் அணி மாவட்ட தலைவர் வெள்ளத்தாய். மகளிர் அணி மாவட்ட துணை தலைவர் உஷா தேவி, தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் பல்வேறு பாஜக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.     புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வாங்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நன்றி தெரிவித்து சென்றனர்.