மறுமலர்ச்சி கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலர் தாமரை கட்சிக்கு தாவுகிறார்களாமே.!

BJP NEWS

மறுமலர்ச்சி கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலர் தாமரை கட்சிக்கு தாவுகிறார்களாமே.!

திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக கூறி அதிலிருந்து வெளியேறி மறுமலர்ச்சியை உருவாக்கும் நோக்கத்தில் புதிய இயக்கம் கண்டவர், அது குறித்து மட்டுமில்லாமல், பல்வேறு பொது பிரச்னைகளுக்காகவும் அனல் பறக்க பேசி வருபவர், தொண்டர்களால் புரட்சி புயல் என்று அழைக்கப்பட்டவர். 

மீண்டும் பழைய திமுகவுடன் தோழமை கொண்டது மட்டுமில்லாமல் அத்துடன் இணைந்து தேர்தல்களையும் சந்திக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகள் சிலரும், தொண்டர்கள் சிலரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, வாரிசு அரசியலுக்கு எதிராக கட்சி ஆரம்பித்து, அந்த நிலையில் தொடர்ந்து நீடிக்க முடியாமல் போனதை கூட சந்தர்ப்ப சூழ்நிலை என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட்டணி தலைமை கட்சியால் ஒரு சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதைதான்  சிகித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது. கூடுதலாக ஒரு சீட்டு கூட வாங்கவில்லை. 

இடது சாரிகளுக்கு இரண்டு சீட்டுகளை கொடுக்கும் கூட்டணி கட்சித் தலைமை, எங்கள் கட்சிக்கு ஒரு சீட்டு கொடுக்கிறது என்றால். அதை நாங்கள் அவமானமாக பார்க்கிறோம். ஆனால் அதை எங்கள் தலைவர் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அப்படியானால் நீண்டகாலம் நெருக்கமாக இருக்கும் கட்சி முக்கிய நிர்வாகிகளுக்கு என்ன செய்ய போகிறார் என்று கேள்வி கேட்கும் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கட்சியைவிட்டு வெளியேறி பாஜக வில் இணையும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. மிகவிரைவில் இந்த அதிரடியும் நடக்கும் என்கிறார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பாக இணைய வேண்டும் என்பதற்காக அவர்கள் காத்திருக்கின்றனராம். தேர்தல் பரபரப்பிற்கு நடுவே இந்த பரபரப்பும் வரப்போகிறது.