பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள் - டி.டி.வி.தினகரன் தகவல்

BJP - AMMK

பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள் - டி.டி.வி.தினகரன் தகவல்

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 7 கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலில், முதல்கட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இடம்பெறுகின்றன. அடுத்தமாதம்(ஏப்ரல்)19ம் தேதி வாக்குப்பதிவும்,  ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. அதற்காக இன்று(20.03.2024) வேட்பு மனுதாக்கல் தொடங்கியிருக்கிறது. 27ம் தேதி வரை மனுதாக்கல் நடைபெறுகிறது. 28ம் தேதி வேட்பு மனு பரிசீலனையும், 30ம் தேதி வாபஸ் பெறும் நாளாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுக்கிடையே அரசியல் கட்சிகள், கூட்டணி அமைத்தால், வேட்பாளர் தேர்வு செய்தல், பொதுகூட்டங்களில் பேசுவதற்கான ஏற்பாடு என்று தேர்தல் வேலையில் இறங்கியிருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அப்படியே இருப்பதால் அதில் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு என அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. காங்கிரஸை தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர் பெயர்களை அறிவிக்க கூட செய்துவிட்டன.

அதிமுகவிலும் கிட்டத்தட்ட கூட்டணி வேலைகள் முடிந்திருக்கிறது. தேமுதிகவிற்கு 5 சீட் ஒதுக்கியிருப்பதாக கூறுகிறார்கள். அவைகள் எது? அதில் யார் யாரெல்லாம் போட்டியிட போகிறார்கள் என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரியவரும் என்கிறார்கள். இந்தநிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அமமுகவிற்கு பாஜக 2 சீட் ஒதுக்கியிருப்பதாக தெரிவிக்கும் அதன் தலைவர் டி.டி.வி.தினகரன், அவைகள் எந்தந்த தொகுதி என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.