பணம் கொடுத்து தேர்தல் செய்தி வெளிடுவதை ஊடக கண்காணிப்பு குழு தடுக்கும் - தேர்தல் அலுவலர் தகவல்
Election news

மக்களவைத் வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை கட்டாயம் ஊடக கண்காணிப்பு குழு அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருமான லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி ஊடக கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தலைமை வகித்தார்.இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர், வேட்பாளர்கள், நாளிதழ், தொலைக்காட்சி, மற்றும் சமூக ஊடகங்களில் செய்யக்கூடிய விளம்பரங்கள் ஜாதி, மத ,இன போன்றவற்றை சுட்டிக்காட்டும் வகையில் இருக்கக் கூடாது. வேட்பாளர்களோ வேட்பாளர்களுக்கு ஆதரவாக விளம்பர செய்பவர்கள் விளம்பரங்களை வெளியிட ஊடக கண்காணிப்பு குழு சான்றிதழ் பெற கட்டாயம் வேண்டும். பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதை இந்த குழு தீவிரமாக கண்காணிக்கும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், ஊடக கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் லக்ஷ்மணன், மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.