தூத்துக்குடி சுற்றுவட்டார் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கிய ஸ்டெர்லைட் காப்பர்

sterlite

தூத்துக்குடி சுற்றுவட்டார் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கிய ஸ்டெர்லைட் காப்பர்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாக்களில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மக்களோடு இணைந்து பங்கெடுத்துக் கொண்டது.

ஸ்டெர்லைட் சுற்றியுள்ள புதூர் பாண்டியாபுரம், மீளவிட்டான் கக்கன்ஜி நகர், மீளவிட்டான் அருந்ததி நகர், சில்லாநத்தம் சாமிநத்தம், நடுவக்குறிச்சி, காயலூரணி மேற்கு,  ராஜாவின் கோவில்,சங்கரப்பேரி, நயினார்புரம், தாளமுத்து நகர், முத்தையாபுரம், கால்டுவெல் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் தினத்தன்றும், அதற்கு அடுத்த நாளும் நடைபெற்ற விழாக்களில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் பங்கெடுத்துக் கொண்டது. பல பகுதிகளில் சர்க்கரை பொங்கல்,வெண் பொங்கல் வழங்கக்கப்பட்டன.

பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் கோலப்போட்டிகள் நடத்தப்பட்டன. கோலப்போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்ட பெண்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாசகங்களை எழுதினர்.  விழாக்களில்  பானை உடைத்தல், கயிறு இழுத்தல், சிலம்பம் சுற்றுதல், ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி,  சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் பரிசுகளை வழங்கியது. பரிசளிப்பு விழாவில் ஸ்டெர்லைட் காப்பர் சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் சுந்தர்ராஜ், காப்பர் உற்பத்தி பிரிவு தலைவர் மாரியப்பன் மற்றும்  ஸ்டெர்லைட் ஊழியர்கள் அந்தந்த பகுதி விழா ஏற்பாட்டாளர்களோடு   கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

இந்த விளையாட்டுப் போட்டிகளை ஸ்டெர்லைட் நிறுவனத்தோடு இணைந்து செயல்பட்டு வரும் தாயகம் சோசியல் டிரஸ்ட்,பெல் டிரஸ்ட், துளசி சோசியல் டிரஸ்ட் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டன.