வந்தேபாரத் ரயிலை தொடர்ந்து,முத்துநகர் ரயில் மீதும் கல் வீச்சு - பகை வளர்த்த பண்பற்ற செயலின் விளைவு?

Trains

வந்தேபாரத் ரயிலை தொடர்ந்து,முத்துநகர் ரயில் மீதும் கல் வீச்சு - பகை வளர்த்த பண்பற்ற செயலின் விளைவு?

பாரத தேசம் என்பது 56 தேசங்களை உள்ளடக்கியது. பல்வேறு குழுக்களாக இருந்தாலும் பண்பாட்டிலும்,கலாச்சாரத்தில் ஒன்றுபட்டு, ஒரே தேசமாக விளங்கி வருகிறது. இந்த வலுவான தேசத்தை பல கூறுகலாக பிரித்து காண்பித்தது வெள்ளைக்காரன். அவன் வழியே தற்போதுள்ள சில குறுகிய வட்ட அரசியல்வாதிகள் மாநிலங்களாக, மொழியாக இன்னும் பல பிரிவுகளாக பிரித்து காண்பிக்கிறார்கள். அவர்களை பின்பற்றும் மக்களும் பிரிவு மனம் கொண்டவர்களாக வளர்கிறார்கள். பள்ளி மாணவர்கள் வரை சென்றுவிட்டது இந்த பிரிவினை புத்தி. அந்த வகையில்தான் ரயில் மீது கல் எறியும் சம்பவங்களும் நடப்பதாக தெரிகிறது. 

கடந்த 4ம் தேதி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் இரவில் கங்கைகொண்டான் என்கிற பகுதிக்கு வந்த போது மறைவில் நின்று மர்மநபர்கள் ரயில் மீது கற்களை வீசினர். இதில் ரயிலின் 9 பெட்டிகளில் 11 இடங்களில் கண்ணாடிகள் உடைந்தது. இந்த மோசமான சம்பத்தை செய்தது யார் என்பதை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்பதற்காக தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்புபடை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கபட்டது. அவர்களின் விசாரணையில் நாரைக்கிண்று பகுதியை சேர்ந்த விடுதியில் தங்கியிருக்கும் பள்ளி மாணவர்கள் 6 பேர் என்று தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்த போது, அதன் விளைவுகளை அறிந்து அதிர்ந்த மாணவர்கள் தெரியாமல் நடந்துவிட்டது என்று கேட்டுக் கொண்டனர். அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு அதிகாரிகளும் அவர்களுக்கு புத்திமதி கூறி சென்றனர். 

இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து இரவு கிளம்பிய முத்துநகர் எக்ஸ் பிரஸ் ரயில், சின்னக்கண்ணுபுரம் அருகே சென்றபோது மர்மநபர்கள் ரயில் மீது கற்களை வீசினர். இதில் ஏசி பெட்டி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. இது குறித்து வழக்குபதிவு அதே கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். வந்தே பாரத் ரயில் மீது ஹாஸ்டல் மாணவர்கள் கல் எறிந்தது போல் தூத்துக்குடியில் உள்ள மாணவர்கள் கல் எறிந்தார்களா?. மது பிரியர்கள் யாரேனும் கல் எறிந்தார்களா என்று அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். 

இதையெல்லாம் தாண்டி ரயில்கள் மத்தியரசுக்கு சொந்தமானது, இன்னும் பல ரயில்களை இயக்குவதற்கு மத்தியரசு தயாராகி வருகிறது என்பதெல்லாம், மாநில அரசியல் ஆர்வளர்களுக்கு பிடிக்கவில்லையோ, அவர்கள் வளர்த்துவிட்ட மாநில ஆதரவு புத்திதான் இப்படியெல்லாம் இளைஞர்களை செய்ய தூண்டுகிறதா என்றும் பார்க்க வேண்டியது உள்ளது. இதுபோன்ற ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதே தேசியவாதிகளின் விருப்பமாக உள்ளது.