திமுகவால் 2026 தேர்தலில் தனித்து போட்டியிட முடியுமா? - கேட்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.எஸ்
Admk news

சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது என்றாலும் இப்பவே அதற்காக அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டன அரசியல் கட்சிகள். தேர்தலை மையமாக வைத்து நடைபெறும் மேடைப்பேச்சுக்களை வைத்தே அதனை பார்க்க முடிகிறது. தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116 வது பிறந்த நாள்விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், அதிமுக அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிட்டது போல் ஆளும் திமுக 2026 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? என்று பேசியிருக்கிறார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி டுவிபுரம் 5வது தெரு அண்ணா நகர் 7 சந்திப்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய தெற்கு பகுதி செயலாளர் நட்டார் முத்து தலைமை தாங்கினார். பகுதிச் செயலாளர் ஜெய்கணேஷ், பகுதி பொறுப்பாளர்கள் சென்பகச் செல்வன், சுடலைமணி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்குப் பகுதி செயலாளர் முருகன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் முந்தைய அதிமுக ஆட்சியின் சாதனைகளையும், திராவிட மாடல் அரசு என்று சொல்லி திமுக செய்து வரும் மக்கள் விரோத போக்கையும் எடுத்துப் பேசிய அவர், இன்று பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள், அறிஞர் அண்ணா, பெரியார் நடத்திய திராவிட கழகம் கட்சியில் இருந்து விலகி திமுகவை துவங்கிய போது முதல் ஆறு மாத காலம் கருணாநிதி திமுகவில் கிடையாது. திராவிட கழகத்தில் இருந்து கொண்டு திமுகவை விமர்சித்து பேசியவர் தான் கருணாநிதி. இன்று திமுகவை தனது குடும்ப சொத்தாக மாற்றி கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என்று ஒரு குடும்பமே திமுகவை அபகரித்து வைத்துள்ளது.
கடந்த 2016 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது. இதே போல் ஒரு தேர்தலிலாவது திமுக தனித்து நின்ற வரலாறு உண்டா? திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் மூன்றே முக்கால் லட்சம் கோடி கடன் வாங்கியும் மின் கட்டணம், சொத்துவரி, பத்திரப்பதிவு கட்டணம் போன்ற மக்களின் அத்தியாவசிய வரிகளை பன்மடங்கு உயர்த்தி மக்கள் விரோத ஆட்சி நடத்தியபோதும் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு திமுக வெற்றி பெற்று மார்தட்டிக் கொள்கிறது. நடைபெற்ற தேர்தலின் வெற்றி மத்தியில் யார் ஆட்சியில் அமர வேண்டும் என்ற காரணத்திற்காகவே தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் சட்டமன்ற தேர்தல் என்று வரும்போது அரசியல் நிலை அவ்வாறு இருக்காது. அதிமுக 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் தனித்து நின்று ஆட்சியைப் பிடித்தது போன்று வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டு அதிமுகவை எதிர் கொள்ள தயாரா? என்று கேள்வி கேட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. பச்சைமால், அதிமுக அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை, தலைமைக் கழக பேச்சாளர் சங்கரன்கோவில் கணபதி, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரும் வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளருமான வக்கீல் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா. சுதாகர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜூலியட், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, சத்யாலட்சுமணன், முருகன், நவ்சாத், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்விக்குமார், இணைச்செயலாளர் லட்சுமணன், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, பிள்ளை விநாயகம், வழக்கறிஞர்கள் செங்குட்டுவன், முனியசாமி, சரவணபெருமாள், சிவசங்கர், மாநகராட்சி கவுன்சிலர் வெற்றிச்செல்வன் முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், நிர்வாகிகள் டைகர் சிவா, ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் கே.என்.ஆனந்தராஜ், உதயகுமார் சுந்தரேஸ்வரன் தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம் ஜான்சன் தேவராஜ் பூக்கடை வேலு, மைதீன், பரிபூரணராஜா, வெங்கடேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் மஞ்சுளா, சாந்தி, ராஜேஸ்வரி, ராதா ஆனந்தராஜ், தமிழரசி, இந்திரா, ஷாலினி, நிர்மலாதேவி, சரோஜா, முன்னாள் கவுன்சிலர்கள் பெரியசாமி, பொன்ராஜ், சந்தனப்பட்டு, மற்றும் சொக்கலிங்கம், மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் சுகுமார், தூத்துக்குடி மணிகண்டன், சிவன், பிரபாகரன், அருண் ராஜா, உலகநாதப்பெருமாள், முருகேசன், பூரண சந்திரன், கே.கே.பி. விஜயன், மகாராஜா, ராமச்சந்திரன், பாக்யராஜ், அருண் ஜெயக்குமார், ஜனார்த்தனன், சுப்பிரமணி கொம்பையா, புற்று கோவில் முருகன், மணிவண்ணன், இசக்கிமுத்து, ஜெரால்டு, ரகுநாதன், பொன்சிங், ஜெயக்குமார், சங்கர் நாராயணன், இம்ரான், நாகூர் பிச்சை, ரெங்கன், ஆனந்த், சந்திரசேகர், அண்டோ, சங்கர், மதன் செல்வகுமார், சுயம்பு, சேவியர் ராஜ், மணி கணேஷ், உதயகுமார், டேவிட் ஜெபசீலன், ஹார்பர் பாண்டி, பி.ஆர். செல்வராஜ், மாடசாமி, மாரிமுத்து, யோவான், மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, சரவணவேல், தளவாய்ராஜ், வக்கீல் ராஜ்குமார் உள்ளிட்ட பெருந்திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் துணை மேயரும் கிழக்கு பகுதி செயலாளருமான பி. சேவியர் நன்றி கூறினார்.