சாதி, மதம் கடந்த பொது சிவில் சட்டம் அவசியமே.! ஆனால் அது சாத்தியமா?
Uniform Civil Code
இந்த பூமி பந்தில் பிறந்த அத்தனை உயிர்களும் சமமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்கிறது. ஆனால் ஆண்டாண்டு காலமான அந்த நிலையை எட்ட முடியவில்லை. அது சாத்தியமா என்றால் அது ஓரளவிற்கு சாதியம் மற்றபடி பிரிவு என்பது எதாவது ஒரு வகையில் இருந்து கொண்டேதான் இருக்கும். அது சாதியாக, மதமாக, மொழியாக, இனக்குழுவாக இருக்கலாம். இதையெல்லாம் ஒழித்துவிட்டு அனைவருக்கும் பொதுவான விதிமுறையை உருவாக்க வேண்டும். அதன்படி மக்களை வழி நடத்த வேண்டும் நினைக்கிறார்கள் என்றால் அது சாதாரண காரியம் இல்லை. ஏனென்றால் பதவிக்கு தக்க அதிகாரம் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் ஆதரிப்பர். சமத்துவம், சமாதானம் பற்றி சினிமா படம் எடுப்போர், புத்தகங்களை எழுதி தள்ளுவோர், பிறருக்கு பாடம் நடத்துவோர் கூட தான் அடிமட்டத்தில் இருந்து பணியாற்ற முடியாதவர்கள்தான். தான் உத்தரவிட்டு இன்னும் பலர் அதை செய்ய வேண்டும் என்கிற பொறுப்பு, அதிகாரம் உள்ளவர்கள்தான். எனவே இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது எதாவது பிரிவு இருந்து கொண்டேதான் இருக்கும். பதவிகள், பொறுப்புகளுக்காக நாம் உருவாக்கியுள்ள இடஒதுக்கீடு உன்னத இடத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது. ஆனால் அதுவே ஒவ்வொருவரையும் குறிப்பிட்ட நபராக அடையாளம் காட்டியாக விளங்கி வருகிறது. இந்த இடத்தில் நமது கருத்து இடஒதுக்கீட்டிற்கு எதிரானது அல்ல. அந்த அளவில்தான் நாம் இருக்கும் போது பிரிவு இருந்து கொண்டேதான் இருக்கும்.
கல்வியும், பொருளாதாரமும் அனைவருக்கு அந்தஸ்தை கொடுக்க வேண்டும். அந்த அந்தஸ்தே மற்றவர்களுக்கு நிகரானவர்களாக ஆக்கும். அப்படியானால் கல்வியும், பொருளாதரமும் அனைவருக்கும் ஒரே மாதிரி கிடைக்க வேண்டும். அதற்கு மக்களும், அரசும் செயல்படவேண்டும். குறிப்பிட்ட விகிதம் அதிகரிக்கும் காலம் வரை இடஒதுக்கீடு அவசியமாகத்தான் இருக்கிறது. கல்வியும், பொருளாதாரமும் பரவலாகி மக்கள் வாழ்க்கை விசாலமான விளையாட்டு மைதானம் போல் ஆகிவிட்டால் அங்கே பிரிவுகள் தலை தூக்காது. அந்த நிலையை உருவாக்குவதே லட்சியமாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் மக்கள் மத்தியில் இருந்த விரும்பத்தகாத நிகழ்வுகளை மக்கள் எண்ணத்தில் இருந்து மறக்கடிக்க செய்வதே அதற்கான அஸ்திவாரமாகும். நாமெல்லாம் ஒன்றுதான் என்பதை தாண்டி நாமெல்லாம் மனிதர்கள், அனைவரும் நல்ல வழியில் வாழ்ந்து போக வந்திருக்கிறோம் என்பதை வலியுறுத்த வேண்டும். அதுவே மக்களை பொதுவானவர்களாக ஆக்கும்.
சாதியாக, மதமாக, மொழியாக இன்ன பிற பகுதிகளாக மக்களை பிரித்து வைத்து செயல்பட்டால் பிரிவுகள் மங்காது, அதற்கு தூபம் போட்டு அரசியல் செய்வோரால் அப்பிரிவுகள் மெருகேறிக் கொண்டேதான் இருக்கும். எனவே சாதி கடந்து, மதம் கடந்து மொழி கடந்து இன பிரிவு கடந்து வாழ்க்கை நடமுறைகளை வகுத்து வைப்பது அனைவருக்கும் நல்லது. அதாவது அவரவர் வாழ்க்கை நடைமுறைகள் அவரவர் எல்லை வரையில் இருக்க வேண்டும். பொது வெளிக்கு அனைவருக்கும் பொதுவான வழிமுறையே இருந்து வரவேண்டும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் பிரிவு எண்ணங்கள் படிப்படியாக குறைந்து போகும். தற்போது மத்தியரசு கூறிவரும் பொது சிவில் சட்டம் அப்படியானதுதான் என்றால் நல்லதுதான். பல்வேறு பிரிவுகளாக இருந்தாலும் இந்தியன் என்கிற ஒரே நேர்க்கோட்டில் நடைபோட போட விரும்பும் மக்களுக்கு இது நல்லதுதுதான். ஆனால் சாதி, மத ஒழிப்பு அரசியல்வாதிகள் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கான அரசியல் வியாபாரம் நடைபெறாமல் போய்விடுமே.!