திமுக ஆதரவு விவகாரத்தில் பீட்டர் அல்போன்ஸ் - திருச்சி வேலுச்சாமி மோதல்
dmk - cong
தமிழக காங்கிரஸ் கட்சியில், முன்னாள் எம்.பி.ம் பீட்டர் அல்போன்சுக்கும், மாநில நிர்வாகி திருச்சி வேலுச்சாமிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
சமீபத்தில், தனியார் யு.டியூப் சேனல் ஒன்றுக்கு பீட்டர் அல்போன்ஸ், ’’கூட்டணி இல்லாமல், தமிழக அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி, வரும் 50 ஆண்டுகளுக்கு யாரும் ஆட்சி அமைக்க முடியாது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பலமான கூட்டணி, தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இதில் கை வைப்பது தேன் கூட்டை கலைப்பது போன்றது.
அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமானால், முதலில் நம்மை அதற்கு தகுதி உடையவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். கூட்டணி வேண்டாம் என்பவர்கள், வெறும் கையை வீசி நடப்பவர்கள்’’ என்று கூறியிருந்தார்.
அவருக்கு பதிலடி தரும் விதமாக, திருச்சி வேலுச்சாமி, பீட்டர் அல்போன்ஸ் அப்படி பேசுவது பைத்தியக்காரத்தனம். செல்வப்பெருந்தகை தலைவரானதும், 6 மாதங்களில், 73 மாவட்டங்களில், 70 ஆய்வுக் கூட்டம் நடத்திவிட்டார். நானே 4 பயிற்சி பட்டறை நடத்தி இருக்கிறேன். இதெல்லாம் காங்கிரசை வைத்து வியாபாரம் செய்கிற பீட்டர் அல்போன்ஸ்க்கு தெரியாது.
காங்கிர்ஸ் தான் ஆட்சியில் இல்லையே, பின் ஏன் மானங்கெட்டுப் போய், திமுக., ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ் பதவி வாங்க வேண்டும். கூட்டணியில் பதவி வாங்கியதாக கூறினால், அவரை மாதிரி, 4 பேருக்கு அமைச்சர் பதவி, திமுக அரசில் கொடுக்க வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறேன் என்றால், அவர் காங்கிரசை விட்டு ஓடிபோகட்டும் என்று கூறியிருக்கிறார்.