தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்ட விரிக்கத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
M.K.Stalin
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கத்தினை தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 10 மாணவிகளுக்கு வங்கி பற்றட்டைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இவ்விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கனிமொழி எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகய்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நலத்துறை ஆணையர் லில்லி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஊராட்சித்தலைவர் பிரம்மசக்தி, துணைத்தலைவர் மகாலெட்சுசந்திரசேகர், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஏபிசிவி.சண்முகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், ஐஎன்டியூசி தேசிய செயலாளர் கதிர்வேல், திமுக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், நகரமன்ற தலைவர்கள் கோவில்பட்டி கருணாநிதி, காயல்பட்டிணம் முத்துமுஹமது,தெற்கு மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜெயக்குமார்ரூபன், ஜெபதங்கம்பிரேமா, ராஜ்மோகன்செல்வின்,தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், துணைச்சேர்மன் காசிவிஸ்வநாதன், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ரெங்கநாதன் என்ற சுகு, மாநகராட்சி தெற்கு மண்டல குழு தலைவரும், வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான பாலகுருசுவாமி, துணை அமைப்பாளர்கள் குருராஜ், மாதேஸ்வரன், கணேசன்,லவராஜா,டினோ,வடக்குமாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், வடக்குமாவட்ட சிறுபான்மை பிரி அமைப்பாளர் எஸ்.டி.ஆர்.பொன்சீலன், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் அசோக், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, மாநகர ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் பரமசிவன், ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், அன்புராஜன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதகண்ணன், ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், பொன்முருகேசன், செங்குழி ரமேஷ், பாலமுருகன், ஜோசப், சதீஷ்குமார், பேரூர் செயலாளர்கள் வேலுச்சாமி, மருதுபாண்டியன், பாரதிகணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துசெல்வன், காவல்காடு சொர்ணகுமார், ராஜாகண்ணு, முத்துலட்சுமி, வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் இம்மானுவேல், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மாநகர அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி, துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், நகரச்செயலாளர் நவநீதப்பாண்டியன், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன், மாமன்ற உறுப்பினர் இசக்கிராஜா, கனகராஜ், சந்திரபோஸ்,கந்தசாமி, வட்டசெயலாளர் கதிரேசன், முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் காளிதாஸ்பண்ணையார், ஆத்தூர் நகரச்செயலாளர் முருகானந்தம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாணிக்கவாசகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதுமைப்பெண் திட்ட விரிவாக்க துவக்க விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32.57 லட்சம் மதிப்பிலான ஸ்கூட்டர்களை வழங்கி, அவர்களுடன் உரையாடினார். விழா முடிந்து திரும்பும் போது மாணவிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்ற முதலமைச்சர், அவர்களிடம் உரையாடியானார். மாணவிகள் ஆர்வமுடன் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது புதுமைப்பெண் திட்டத்திற்காக மாணவிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ் நாடு அரசின் தலைமைச்செயலாளர் முருகானந்தம் வரவேற்று பேசியதாவது : கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது 2030ம் ஆண்டிற்குள் அனைத்து துறையிலும் தமிழகம் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். எந்த திட்டமாக இருந்தாலும் மக்களுக்கும் மாநிலத்திற்கும் நீண்ட காலம் பயனளிக்க கூடியதாக இருக்க வேண்டும் என்றார். அதன்படி அவரது எண்ணத்தில் உருவான புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தினால் கடந்த 3, 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரிக்கு சென்று படிக்கமுடியாமல் பாதியில் நின்றவர்கள் கூட கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தில் தற்போது 4.50 லட்சம் மாணவிகளும், தமிழ்புதல்வன் திட்டத்தில் 3.5 லட்சம் மாணவர்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் 75 ஆயிரத்து 28 மாணவிகள் இவ்வாண்டு பயனடைய உள்ளனர். எந்த திட்டத்தின் பயன்களையும் பெறுவதற்கு மாணவர்களை அரசு அலுவலகங்களுக்கு அலைய வைக்க கூடாது என்பதற்காக கல்லூரியிலேயே ஆன் லைன் மூலம் பதிவுகளை செய்து உதவு தொகைகளை பெறமுடியும். இது அடுத்த தலைமுறையை சிந்தித்து எடுக்கப்பட்ட திட்டம். வரும் நாட்களில் அறிவான, வலுவான தமிழகத்தை உருவாக்கும் உன்னத திட்டம் என்றார்.
நிகழ்ச்சியில் காயத்ரி பேசுகையில், நான் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு முடியாத சூழ்நிலை இருந்தது. புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம் கட்டுவதற்கு முடிந்தது. அது தவிர கம்யூட்டர் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கும் உதவியாக உள்ளது. பெற்றோரின் பாரத்தை குறைக்கும் இந்த திட்டம் ஒரு புரட்சிகரமான திட்டம். இதனை கொண்டு வந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
மாணவி ஹர்சிகா பேசுகையில், வறுமை, பொருளாதார நெருக்கடியில் எனது கல்லூரி படிப்பு கேள்விக்குறியாக இருந்தது. எனது பெற்றோர் என்னை கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்க முடியாமல் திணறினர். அப்போது அவர்களிடம் புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம் திட்டங்களை எடுத்து கூறி கவலைப்படாமல் என்னை கல்லூரியில் சேருங்கள் என்றேன். அதன்படி என்னை கல்லூரியில் சேர்த்தனர். இப்போது கல்லூரி கட்டணம், தேர்வு கட்டணத்தை செலுத்த இத்திட்டம் உதவியாக இருக்கிறது. அதுபோல் போக்குவரத்திற்கு விடியல் இலவச பஸ் பயணம் பெரிதும் உதவியாக இருக்கிறது என்றார்.
மாணவி சோபிகா பேசுகையில், நான் 2021-ல் 12ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தேன். 2ம் ஆண்டு படிக்கும் போது எனது அப்பா இறந்துவிட்டார். அதனால் படிக்க முடியாமல் போய்விட்டது. எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். புதுமைப்பெண் திட்டம் வந்த பிறகு அதன் உதவியுடன் நான் இப்போது அரசு பாலிடெனிக் கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர்கிறேன். தடைபட்ட எனது கல்லூரி படிப்பு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் திரும்ப கிடைத்திருக்கிறது என்றார்.
முதலமைச்சர் விழா முடிந்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இருந்து புறப்பட்டு பிரையண்ட்நகர் வழியாக பாளை மெயின் ரோட்டிற்கு செல்லும் வழியில் சாலையோரம் நீண்ட தூரத்திற்கு நின்று மக்கள் வரவேற்றனர். இதனால் முதல்வர் வாகனம் மெதுவாக ஊர்ந்து சென்றது. சிதம்பரநகர் பகுதியில் வந்தபோது தூய்மைப்பணியாளர்கள் முதலமைச்சரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி சென்றார்.