திருச்செந்தூர் வரை வந்தே பாரத் இரயில் - த.மா.கா. வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் வாக்குறுதி
election news
நாசரேத்,ஏப்.03:தூத்துக்குடி மக்கள வைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி தமாகா வேட்பாளராக போட்டியிடும் என்னை வெற்றி பெறசெய்தால் வந்தே பாரத் இரயில் திருச்செந்தூர் வரை இயக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நாசரேத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் உறுதி அளித்தார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி தமாகா வேட்பாளராக போட்டியிடும் எஸ்டிஆர் விஜயசீலன் திறந்த ஜீப்பில் நாசரேத் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சைக்கிள் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தமாகா வேட்பாளராக போட்டியிடுகிறேன். பிரதமர் மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. எனக்கு சைக்கிள் சின்னத்திற்கு வாக்களித்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற செய்தால் நெல்லை வரையில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் வரை இயக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், தொகுதியில் புதிய தொழிற்சாலை கொண்டு வரவும் முயற்சி எடுப்பேன் . எனவே தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்து மோடிஜி பிரதமராக எனக்கு சைக்கிள் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன் என்றார்.
அப்போது மாவட்ட பாஜக பொது செயலாளர் சிவமுருகஆதித்தன், மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம் , நாசரேத் நகர செயலாளர் சாரதி, ஆழ்வை மண்டல தலைவர் குமரேசன், பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் ஜெயா நாச்சியார், நகர அமமுக பொருளாளர் சுப்பையா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் விக்னேஷ், கிளை தலைவர்கள் பட்டு, வசந்த் , ராமதாஸ், ஆன்மீக பிரிவு ஒன்றிய தலைவர் ரவி, கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.