பிரதமர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு - தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி மீது பாஜக நிர்வாகி போலீசில் புகார்

BJP

பிரதமர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு - தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி மீது பாஜக நிர்வாகி போலீசில் புகார்

பிரதமர் நரேந்திரமோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்ததாக தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி முத்துமணி மீது தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாரதி ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் காளிராஜா போலீசில் புகார் மனு அளித்துள்ளார். 

மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அவர் அளித்துள்ள மனுவில், தூத்துக்குடியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் ஐடி விங் மாநில செயலாளர் முத்துமணி என்பவர் பாரதபிரதமர் நரேந்திர மோடி பற்றி முன்னுக்கு பின் முரணான  கருத்துக்களை  தொடர்ந்து சமூகவளைதளத்தில் பதிந்து பொது அமைதிக்கு குந்தம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறார் . 

இவர் அவருடைய தனிப்பட்ட முகநூல் கணக்கில் பதிவது மட்டும் அல்லாமல் தூத்துக்குடி கார்பரேஷன்  - மாவட்ட காங்கிரஸ் கமிட்டி என்ற கணக்கிலும் பதிவிட்டு வருகிறார். 

தற்போது 21-11-2023 அன்று இரவு 3.10 மணிக்கு  அவருடைய முகநூல் கணக்கில் உலகக்கோப்பை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் பிரதமர் மோடி பிரதமாரக இருக்கக் கூடாது. என இந்திய அணி கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா கூறியது போன்று போலியான புதியதலைமைறை கார்டு ஒன்றை பதித்து உள்ளார். அவர் மீது வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.