கனிமொழி விரைவில் சிறை செல்லும் நிலை வரும் - அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஆருடம்

ADMK Election news

கனிமொழி விரைவில் சிறை செல்லும் நிலை வரும் - அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஆருடம்

தேர்தல் வந்துவிட்டாலே ஒருவர் இன்னொருவர் குறித்து பேசுவது வழக்கம். அந்த வகையில் பிரபலமாக பேசப்பட்டு வரும் 2 ஜி வழக்கு விசாரணையை நினைவு படுத்தியிருக்கிறார் தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி.  

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவர் இன்று 25.03.2024  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித்தலைவரும், தேர்தல் அலுவலருமான  லட்சுமிபதி- யிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவின்  போது அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு , முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்களுக்குபின் செய்தியாளர்களிடம் பேசிய சிவசாமி வேலுமணி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நான்கு ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை திட்டங்களை சொல்லி வாக்கு  சேகரிப்பேன் என்றவர், திமுக தொடர்ந்து ஊழல் செய்து வருகிறது. அதனால் ஒவ்வொரு அமைச்சர்களும் சிறை சென்று வருகின்றனர். அதேபோல் 2 ஜி வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. அதனால் திமுக வேட்பாளர் கனிமொழி விரைவில் சிறைக்கு செல்லும் நிலைமை ஏற்படலாம். எனவே தூத்துக்குடி தொகுதி வாக்காளர்கள் படித்தவர்கள் சிந்தித்து வாக்களிப்பவர்கள். எனவே வாக்குகளை வீணாக்காமல் இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். நாளை 26.03.2024 அதிமுக பொதுசெயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே உள்ள திடலில் வைத்து  எனக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வருகிறார் என்றார்.

அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட அவைத் தலைவர்கள் வழக்கறிஞர் திருப்பாற்கடல், என்.கே.பெருமாள், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலளார் சுதாகர், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆறுமுகநயினார் துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரபு, முன்னாள் எம்.பி. நட்டர்ஜீ, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் எம்.பெருமாள், நடராஜன், டேக் ராஜா, நாசரேத் ஜூலியட், பில்லா விக்னேஷ், தனராஜ், கே.ஜெ.பிரபாகர், அய்யனடைப்பு ராஜேந்திரன், என்.கே.பி.வரதராஜபெருமாள், கவிஅரசன், மகளிர் அணி பத்மாவதி, ஊராட்சிமன்ற தலைவர் ஜாக்சன்துரைமணி, ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி,  மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், பகுதி கழக செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், விஜயகுமார், செம்பூர் ராஜ்நாரயணன், பூந்தோட்டம் மனோகரன், சௌந்தரபாண்டி, தாமோதரன், லெட்சுமணப்பெருமாள், செல்வக்குமார், ஜவஹர், வன்டானம் கருப்பசாமி,  பால்ராஜ், தனஞ்ஜெயம், தனவதி,  அன்புராஜ், நகரக் கழக செயலாளர்கள் மகேந்திரன், காயல்மௌலானா, விஜயபாண்டியன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், துணைச் செயலாளர் ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணித் தலைவர் உரக்கடை குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைப்பாண்டியன், இராமசந்திரன், வலசை வெயிலுமுத்து, முன்னாள் அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ரூ மணி, மாநகராட்சி எதிர்கட்சிக் கொறடா மந்திரமூர்த்தி, வழக்கறிஞர்கள் செங்குட்டுவன், சரவணபெருமாள், முனியசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் ஜோதிமணி, சத்யாலெட்சுமணன், முத்துக்கனி, முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு, எஸ்.கே.மாரியப்பன், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், தூத்துக்குடி மணிகண்டன்,  முன்னாள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மகாலிங்கம், கூட்டாம்புளி வேல்சாமி, சுப்புநாராயணன், குரும்பூர் பாலமுருகன், தென்திருப்பேரை கந்தன், கே.கே.பி.விஜயன்,  சொக்கலிங்கம், வெங்கடேஷ், சுப்பிரமணிபாண்டியன், டேவிட் ஏசுவடியான், உலகநாதன், அண்டோ, நவ்சாத், ஜெயக்குமார், ராஜன், ரகுநாதன், அந்தோணிராஜ், டைமன்ட்ராஜ், பூர்ணசந்திரன், சங்கர், பாலஜெயம், சாம்ராஜ், சரவணவேல், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, நிலா சந்திரன், யுவன்பாலா, மகளிர்கள் இந்திரா, ராஜேஸ்வரி, ஸ்மைலா, ஷாலினி,  முன்னாள் கவுன்சிலர்கள் மெஜிலா, சாந்தி, பொன்ராஜ், சந்தனபட்டு, நிலா சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். 

அதிமுக வேட்பாளர் ஆர்.சிவசாமிவேலுமணியின் வேட்புமனுவை சகாயராஜா என்பவரும் அதிமுக மாற்று வேட்பாளர் எஸ்.ஆனந்தி பிரபா வேட்புமனுவை உதயகுமார் என்பவரும் முன்மொழிந்திருந்தனர்.