தூத்துக்குடியில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு

BJP

தூத்துக்குடியில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடியில் என் மண் என் மக்கள் யாத்திரைக்காக வருகை தந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.   

தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டும் என்று அதன் தலைமை முயற்சி செய்யும் வேளையில் வந்து சேர்ந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை. அவர் வருகைக்கு பிறகு தமிழக பாஜகவில் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக அண்ணாமலை தன்னுடைய அரசியல் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதன் ஒருபடிதான் என் மண் என் மக்கள் யாத்திரை. இராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரா இன்று தூத்துக்குடியில் தொடர்கிறது. 

கடந்த இரு தினங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் யாத்திராவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதுபோல் இன்று தூத்துக்குடியில் அண்ணாமலைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு அவரை மிகுந்த மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜன் வெற்றி பெற முடியாமல் போனதில் இருந்து பாஜகவால் தூத்துக்குடியில் கால் பதிக்க முடியுமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் இந்த இடைவெளி காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் பாஜகவினரை உற்சாகமடைய செய்திருக்கிறது. 

தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சட்ட மன்ற தொகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை அடுத்ததாக குமரிமாவட்டம் செல்கிறார்.